Archive for December 2013
சுனாமி
By : Unknownஇன்று நினைத்தாலும்
என்னிரு கண்களும்
குளமாகின்றது...
அன்றைய அதிகாலை
விடியலானது
அனைத்து உள்ளங்களையம்,
கண்ணீரில் ஆழ்த்த தான்
என்பதை யாருமே
அறிந்து இருக்க
மாட்டார்கள்...
அன்றைய அதிகாலை
நானும் கடலுக்கு
அன்மையில் உள்ள ஒரு
பிரதேச வைத்தியசாலையில்
தான் தங்கியிருந்தேன்...
முதல் அலரலோடு
என்னைக் கடந்து சென்ற
உடல் முழுவதுமே
இலைச்சருகுகளாலும்,
அழுக்கு நீராலும் நனைந்த
அந்த பத்து மாத குழந்தையின்
முகம் ஒன்பது ஆண்டுகள் என்ன?
என்னுயிர் உள்ளவரை
கண்களை விட்டு
மறையாது...
ஒன்றா, இரண்டா, சொல்ல
என்னும் போதே
கண்கள் இரண்டும் அருவியாய்
ஊற்றெடுக்கின்றன...
அந்த ஆழிப்பேரலையால்
கொப்பு கொப்பாய் பூத்துக்குழுங்கிய
தோட்டம் மட்டுமல்ல
அவர்கள் உயிருடன் சேர்ந்த
என் உணர்வுகளும் தான்
அழிந்து போனது...
கரையில் உள்ள சொந்தங்களை
என்னி கடலுக்குச் சென்ற
மீனவனும்...
கடலுக்குள் தவிக்கும் சொந்தங்களை
என்னி கரையில் துடித்த
குடும்பங்களும்...
தவித்த அந்த நிமிடங்களை
சொல்வதற்கு ஏனோ
வார்த்தைகள் தான் வர
மறுக்கின்றது ....
இன்று நினைக்கையிலும்
என் விழிகளை நனைத்து செல்லும்
ஆழிப்பேரலை நினைவுகளுக்கு...
"என் கண்ணீர் அஞ்சலி"
-முஹம்மது ஆரிப் அஷ்ரப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
ஏனையவை,