- Back to Home »
- அஸ்ரப் ஹான் , எழுச்சிக் கவிதை , வாழ்க்கை கவிதை »
- விதவை
Posted by : Unknown
Friday, February 14, 2014
பின்னரும் வாழத்
துடிக்கின்ற ஒரு இளம்
வண்ணத்துப்பூச்சி
"இவள் "
தொட்டனைத்து தாழி
கட்டியவனும் பட்டுப்
போனதாலோ...
வர்ணங்கள் எல்லாம்
கெட்டுப்போன வெளிர்
வானவில்...
"இவள் "
காமக் கண் கொண்டு
இச்சை ஊளையிடும்
நரிகளுக்கு...
உஷ்னமேற்றி விழிகொண்டு
உலை வைத்தெரிக்கின்ற
உன்னத பிறவி
"இவள் "
சுற்றத்தார் பாடுகின்ற
வசைகளை இனிமையான
இசையென ரசிக்க
கற்றுக் கொண்ட
ரசிகை...
"இவள் "
விதவை என்னும்
பட்டத்தின் நாணேற்றி
வாழ்க்கை என்ற
இருண்ட வானிலே
பறக்கவிட துடிக்கும்
அதிசய சிறுமி
"இவள் "
உளி தொலைந்த
பின்னும் தன்னை விட்டு
தொலைந்தவன் உருவை
தினமும் கண்ணீரில்
கரையும் உயிரில்
சிற்பமாய் வடிக்கின்ற
உன்னத சிற்பி
"இவள் "
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்