- Back to Home »
- அஸ்ரப் ஹான் , எழுச்சிக் கவிதை , வாழ்க்கை கவிதை »
- விடா முயற்சி
Posted by : Unknown
Wednesday, January 8, 2014
ஊரார் சிலர்
ஊனமென ஒதுக்கினர்
தானே சிலர்
ஊனமென ஒதுங்கினர்
கைத்துனை
ஒன்று கொண்டு
நடந்து வந்தவனும்
சற்று நேரத்தில்
சில்லரைக்காய்
சாலையோரம் கையேந்த
சாதிக்கவேண்டுமென நீயும்
சாலையிலோடுகின்றாய்
உணர்ச்சியுள்ள யொன்றையும்
உணர்வற்ற மற்றொன்றை
ஊண்டு கோலாகவும்
கொண்டு
அடுத்தவன் ஒனக்கு
ஊக்கமளிப்பான் என்று
ஒரு போதுமென்னாதே
நீயே
உனக்கு தைரியமளி
உன்னை மட்டுமே
முழுதாய் நம்பு
ஒட்டுன்னியாய்
இன்னொருவனில்
ஒட்டி இருப்பதை விட
ஒற்றைக் காலாயினும்
உன் காலில் துனிந்து நில்
அடிபட்டவனெல்லாம்
வீழ்ந்து கிடைக்கையில்
புதிய தளிர் விட்டு
எழுச்சி பெறவந்தவன்
நீ...
பெற்றெடுத்த அந்த தாயும்
வளர்த்தெடுத்த இயற்க்கை
உனக்காய் இங்கிருக்க
ஊனமென்பது ஒரு
குறையல்லவே
முயற்சியே உன்னை
பூரண மனிதனாக்கும்
முயன்று கொண்டேயிறு
முற்றுப் பெறாது யென்றும்
வெற்றி...
- முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்