அதிகம் வாசித்தவை

என் நாட்குறிப்பு!

By : Unknown

உன்னை காணாத
நாட்களில் எல்லாம்
நட்சத்திரங்கள் இல்லாத
வானமாகவே !

வெறுமை பூத்திருக்கின்ற
பக்கங்கள் யாவும்
உனக்கென ஒருகவிதை
வரைந்து தான் !

வெறுமை போக்கி
நிரப்பச் சொல்லி
நச்சரித்துக் !

உன்னால் உனக்கான
எனது நாட்குறிப்பு !

-முஹம்மது ஆரிப் அஷ்ரப் ஹான்

மழைக்கால நினைவு

By : Unknown















இலை விரித்து
செய்த குடை
மழை நனைகையில்..
அதனுள்ளே....

என் தோள்களில்
நீ சாய்ந்து
இமைகள் மூடிய
அந்த வேலை

மெய் மறந்தே
நானும் நின்று
உன்னை ரசித்த
அந்த வேலை...

மனதை விட்டு
மறக்காத
மழைக்காலத்து
மனது நிறைந்த
நினைவுகள்...

இன்றைய மழையில்
கண்முன்னே வந்து
மறைகிறதே..


           - முகம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 


அந்தி மாலை பெய்த மழை

By : Unknown



















மழை பெய்து ஓய்ந்து
இருந்த அந்த
அழகான அந்தி மாலை
பொழுது சாயும் நேரம்

ஆங்காங்கே குளித்து முடிந்து
தலைதுவட்ட மறந்த அம்
மரத்தின் பச்சைப்பசேலெனும்
பச்சை வண்ண இலைகள்

மெல்லமாய் தட்டிசெல்லும்
தென்றலாய் கூடவே
இதமான சாறல்கள் என்
மனைதை கொள்ளை கொள்ள

இலேசாக இமைகள் மூடவே
இதமான நினைவுகள் எல்லாம்
இமை திறக்காமலே என்
இரு விழிகளையும் நனைக்கிறது..


              -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 


முதிர் கன்னி

By : Unknown













உற்றார் உறவினர் சுற்றமும்
நட்பும் எல்லாமே சூனியமே

முப்பது தாண்டுகிறது
நாப்பதை எதிர் நோக்கி

என்னை நோக்கி தான்
எம் மகனும் வரவில்லை

தீ பட்டு எறிவது போல்
மனப் பூ பற்றி எரிகிறது

தேனீ ஓன்று தீண்டாமல்
தேயும் ஒரு மலரிங்கு

சுடர் விடுகின்ற என் வாழ்வும்
சூனியமாய் ஆன தேனோ

படர் கோடிக்கும் கொப்பில்லை
தொடர்வதிலும் ஏதும் தவறில்லை

வல்லவன் எவனும் வரவில்லை
வாழ்வேதும் தரவுமில்லை

நாளை நாளை என்றே
நகர்கிறது என் வாழ்வும்


                  -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

இறப்பு

By : Unknown









உடலை விட்டு
உயிர் மூச்சு
ஓடினால்

உலகம் காணும்
இறப்பு

என்னை விட்டு
உந்தன் மூச்சு
ஓடினால்

நான் காணும்
எந்தன் இறப்பு


                 -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

சிறுவயது நினைவுகள்

By : Unknown













கை, கால்களில் எல்லாம்
புதிதாய் இறக்கைகள் முளைத்து
சந்தோசத்தின் உச்சி வானம் வரை
பறந்து திரிந்த காலம் அவை...

எப்படி தான் மறக்க முடியும்
அந்த பொன்னான நினைவுகளை
வீதியோரமாய் விடுமுறை நாள்
தேடியே விளையாடி மகிழ்ந்ததை

இரண்டாய் குழு பிரித்து ஆடிய
கிட்டிப்புள் - எத்துக்கம்பு கொண்டு
கிட்டிப்புள் தூக்கி வீசி ஆடியதை

தென்னை மட்டை மாட்டு
வண்டிப் பயனங்கள்
பனைமர நுங்குகளில் இணைத்த
தள்ளு வண்டிப் பயணங்கள்

மரக்கட்டையில் செய்த பம்பரமும்,
காலை, மாலையென தெருக்களில்,
கூடி கோலி அடித்து மகிழ்ந்ததை...

கழட்டிப் போட்ட சைக்கிள்
டயரும், வலயமும் எங்கள்
கால்கள் சென்ற இடங்கள்
எல்லாமே கூடவே பயணிக்கும்

பாடசாலை விடுமுறையில்
சாலையோரம் ஆடி மகிழ்ந்த
உள்ளூர் உலகிண்ண கிரிக்கட்
சுற்றுப் போட்டிகள்

மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த
அந்த காலம் சுருங்கி இன்றே
ஐபாட், டாப்லட் வடிவில் அனைவர்
உள்ளங்கைகளிலும் தவழ்கிறது

அத்தனை சந்தோசங்கள்களும் இன்று
அடியோடு இழந்து விட்டோம்
சந்தோசங்கள் மட்டுமல்ல மாறாக
எங்களது மன நிலையம் தான்

பசுமைகள் எல்லாம் மறைந்து
பாலைவனமாய் மாறுது
அன்பில்லாத நெஞ்சங்களாக
வஞ்சங்கள் நிறைதுது...


                       -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

என் விழி சொன்ன காதல்

By : Unknown













பச்சை கம்பளங்கள்
விரித்த புல் வெளியும்
வீயடிக்கும் காற்றிலாடும்
வெண்ணிற திரை நீர்வீழ்ச்சியும்

கன்னம் சிவந்த வெட்கத்தில்
அந்தி நேர வானம்
கருங்கூந்தல் மேனியாய்
சாயும் பொழுதுகள்

காரிருள் மேகமாய் வானம்
நீண்ட மரங்கள் - அதிலே
சிணுங்கள்கலோடு மெல்லமாய்
சிறகு தட்டும் காதல் பறவைகள்

இயற்கை அன்னை அள்ளிதெளித்த
இக்காட்சிகளை ரசித்தபடியே
இதய அறைகளில் இருந்து இதமான
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

கண் பார்வை தொடும் தூரம்
வரை தனிமையே நீண்ட
ஒற்றையடிப் பாதையில் அவளோடு
நானும் பொடி நடை பழகையில்

என் தோள்கள் அவள் தோள்கலோடு
சிநேகம் கொள்ள துடிக்கையில்
எதிர்பாராமலே என் விரல்களோடு
அவள் விரல்களும் பின்னிப் பிணைய

இருவரின் இதயங்களும் அமைதியாய்
இதமான மௌன கீதங்கள் இயற்ற
இதழ்கள் மட்டும் கொண்ட காதலை
சொல்ல முனைந்து கொண்டே இருந்தது

இதழ்கள் முனைந்து தோற்றத்தை
உணர்ந்து எனது விழிகளும்
காதல் உணர்வுகளை எல்லாம்
தூதாய் அனுப்பியது அவள் விழியிடம்

புவிஈர்ப்பு சக்தியை அவளின்
விழிஈர்ப்பு சக்தியும் என்னில்
மோதியே என்னிரு விழிகளையும்
ஆட்கொண்டது சிறிது நேரம்

என் விழியில் வீழ்ந்தாலோ
அவளும் காதல் கொண்டாலோ
ஒரு சிறு புன்னகையாலே
என்னையும் காதலில் வீழ்த்திட்டால்

"என் விழி சொன்னா காதலில்"


                         -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

ம(னித)துக்கடை

By : Unknown













ஏட்டில் எழுதின கல்வியும்
எட்டாக் கனியாய் இருக்க
எட்டு வயதுக் குழந்தையும்
எட்டி டாஸ்மார்க் பாக்குது

பள்ளி செல்லும்
வழி தவறியதால்
போதை பயிலும்
இடமாக மதுக்கடை

வருங்கால தூண்களாய்
வர்ணித்த அப்துல் கலாமின்
கனுவுகள் வழுக்கி விழும்
இடமாய் மதுக்கடை

ரேசனில் அரிசிக்காய்
கா(ல்)மணி நேரம் கூட
நிற்க முடியவில்லை

காலையிலே
கடை திறக்கும் வரை
கால் கடுக்க நிற்கின்றான்
குடிமகன் மதுகடையில்

குடித்த போதை சுகத்தில்
குடி மகன்
உண்ண உணவில்லா சொல்லா
துயரில் உறவுகள்

தன் சாவை
தானே பணம் செலுத்தி
மனிதன் உறுதி செய்து
கொள்ளுமிடமாய் மதுக்கடை

விதவைகளின் இலவச
மகப்பேறு நடக்கும்
மருத்துவ மனையாய்
மதுக்கடைகள்

இமயம் தொட வேண்டிய
இளசுகள் சீரழிந்து
இன்று பாதாளம் வீழ
இயங்கும் கடை 

"மதுக்கடை"


             -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

நான் ரசித்த பௌர்ணமி இரவு

By : Unknown











அரும்பாக தோன்றிய மொட்டு
மெதுவாக மலர்ந்தால் போல்
படிப்படியாக வளர்ந்து இன்று
பூரண மலராக முழுமதி தோன்றுகிறது
அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக

இவ் அழகை காண மலர்ந்த
தோட்டத்து மல்லிகையாக
மின்னிடும் மின்மினியாக
வானத்து விண்மீன்கள் கொத்து
கொத்தாக பூத்திருக்க

நிலவொளியில் நிறைந்து அலைததும்பும்
பாற்கடலிலே முத்துக் குளிக்கவே
சாம்ராஜ்ய அரசிலங் குமரியாய் நிலவரசி
வலம் வருகிறாள் மெதுவாக மேகத்தினூடே
அரண்மனைக் காவலர்களாய் ஆடையணியா
விண்மீன்களின் துணை கொண்டு

மூடி இருந்த ஜன்னல் திரைவிலக்கி
மெல்ல அதனருகே கவிழ்ந்து படுத்து
கால்களிரண்டும் மேலும் கீழுமாய் நடனமாட
படிப்பதற்காய் விரித்து வைத்த புத்தகமும்
திறந்தபடியே எனை எதிர்பாத்து தவித்திருக்க

எனதிரு கண்களும் உள்ளமும் மட்டுமே
ஏனோ ஜன்னல் வழியே அழையா
விருந்தாளியா உல் நுழைந்து இருந்த
பெண்ணிலவோடு ஏதேதோ மௌன
பாசைகளில் பேசிக் கொள்கிறது...


                       - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -