அதிகம் வாசித்தவை

Archive for January 2014

மலரும் வண்டும்

By : Unknown












வண்ண வண்ணமாய்
வாசனை மிகுந்தததாய்
செடியிலும் படர் கொடியிலும்
இதழ்கள் மலர்ந்து பூத்தாயோ...

மழை நின்ற பின்னே
தோன்றிய வானவில்லின்
சாயம் கொண்டுதான்
உனக்கு வர்ணம் சேர்த்தாயோ...

இல்லையேல் உன்னிடம்
உறவாடிட வந்தமர்ந்து சென்ற
வண்ணத்துப் பூச்சியிடம் தான்
வர்ணங்களை திருடிக் கொண்டாயோ

யார் சொல்லித்தான் அறிந்தனவோ
திசை மாற்றும் வண்டுகளும்
நீ வயதுக்கு வந்த மொட்டில்
பூப்படைந்த சேதிதனை...

இல்லையேல் நீதான் காற்றை ஏமாற்றி
தலையசைத்து சமிக்ஞை செய்தாயோ
படை எடுத்து வருகின்றது
உன்னில் சுரந்த தேன் அருந்த...


             -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

மதங்கள்

By : Unknown










மதம் மனிதனை பிடித்தது
மனிதனுக்கு மதம் பிடித்தது
பிறகு பார்த்தால் மனிதனுக்கு
மனிதனையே பிடிக்கவில்லை

மதம் பிடித்து மனிதர்களை
கொன்றது யானை
எந்த மதம் என்று தான்
எவருக்குமே தெரியவில்லை

கீதையில் உள்ளதெல்லாம்
வெறும் கிறுக்கலாய் ஆனது
கோயில் மணி கூட ஏதோ
கேலிக் கூத்தாய் ஆனது

நபிகள் (ஸல்) கூறியதெல்லாம்
முகவரி அறுந்து போகுது
இன்றைய இளசுகள் எல்லாம்
இஸ்லாத்தை மறந்து தூரம் போகுது

இயேசு சிலுவையை சுமக்க
மனித பாவமோ மலையளவு குவிய
கிறிஸ்தவத்தின் இன்றைய நிலை
கிழித்து வீசிய காகிதமாய்

புத்தர் சொன்னது புதுமை ஆச்சு
போதி மரமோ ஈரமிழந்து போச்சு
பௌத்தம் என்பதே இன்று காவி
உடைக்கே உரியதாய் ஆச்சு

மதங்கள் என்பதே வெறும்
போதையாய் போச்சு
மனிதநேயம் கடையில் விற்கும்
சரக்காய் போயாச்சு

மத வெறிகளை களைவோம்
மதங்கள் போதிக்கின்ற மனிதநேயம்
பேனுவோம் - அனைவரும் ஒரு
குடையின் கீழ் ஒன்று படுவோம்


முயற்சி திருவினையாக்கும்

By : Unknown










முன்னோக்கி முதலடி வைத்தால்
முடிவினை தொடலாம் 
ஓரிடமாக இருந்தால்
எதை தான் பெறலாம்

நீ வைக்கும் ஒவ்வோர் அடியும்
ஒவ்வொரு படியாகவும், ஒவ்வோர்
படியும் உன் வழியாகவும் மாறும்

தடுக்கி விழுந்தாலும் முடங்கிடாதே
முயற்ச்சி எடுத்த காரியத்தில்
மணம் தளர்ந்தும் விடாதே

திருகிவிட்ட விசையைப் போல்
ஏவி விடப்பட்ட அம்பை போல்
முயற்சியை நிறுத்து இலக்கினிலே

உயரத் தெரியும் நிலவது
உறுதியுடன் நீ இருந்தால்
உன் உள்ளங்கையில் உறவாடும்

விடா முயற்ச்சியுடன் தூக்கம்
தொலைத்து சிட்டுக்குருவியாய்
சிறகு தட்டி பறந்து செல்...

நிஜங்களின் உறுதிக்காய்
நிவர்த்தி தேடுகையில்
நிழல்களின் ஆதிக்கம் தடையிடும்

திசைகளெட்டும் திறந்துள்ளது உனக்காக
அனலாய் தகிக்கும் திறமையை
திடமாய், தொளிவாய், திட்டமிடு

ஆயிரம் தடைகள் அரங்கேரி
நின்றாலும் ஆக்கும் செயலை
நீ அறியனையில் ஏற்றிடு

முன்னிருக்கும் ஒருவரையும் முட்டாளென
என்னாதே, முன்டியடித்து முன் செல்ல
முயற்சி ஒன்றே கைகொடுக்கும்

முரண்பாட்டு வாழ்க்கையிலே
முடியாதென்ற சொல்லே
முட்டுக்கட்டை இட்டுவிடும்

தோல்வி தரும் வலியை விட
தோற்றுவிடும் என்ற என்னமே
அதிக வலியைத் தரும்

இது நாள் வரை உனது பயணம்
சோம்பேறியாக அமைந்திருக்கலாம்
இதன் பின்னர் உனது பயணத்தை

சூரியனை நோக்கி செலுத்து
ஏனெனில் சூரியனுக்கு சென்றவர்
இங்கு எவருமே இல்லை...


         - முஹம்மது ஆரிப்  அஸ்ரப் ஹான்

படிக்கட்டு

By : Unknown








அன்றாடம் நீ
பயன்படுத்தும்
படிக்கட்டுகளே !
அழகாய்,
அர்த்தமுடன்
உணர்த்திவிடுகிறது
வாழ்க்கையின்
ஏற்ற(ம்)தாழ்வுகளை

துணிந்து
நீயெடுத்து
வைக்கின்ற,
ஒவ்வொரு
எட்டுக்களும்
உன்னை,
ஒவ்வொரு படி
உயர்த்திக்கொண்டே
செல்லும் உன்
வாழ்க்கையில்

நீ முதல்படியேறியதில்
இருந்தே படிப்படியாக
முன்னேறுகையில்
அருகிலிருந்து தோள்
தட்டிக் கொடுக்கும்
நண்பனை விட
நிலை தடுமாறி நீ
ஒரு நிலையிலிருந்து
அடித்தளம் தாழ்ந்த
போதும் ஆறுதலாய்
உன்னோடிருப்பவனே
உண்மையான
நண்பன்............


        - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

தனிமை

By : Unknown









மெல்லிய இருள்
சூழ்ந்து கொண்ட
ஓர் அழகிய
ஆற்றங்கரையோர
மணல் மேட்டில்
தனியாய் நானும்
அமர்ந்திருக்க...

அவளின் வருகைக்காய்
ஏங்கும் என்னைப்
போலவே...
நீயும் விண்மீன்களின்
வருகைக்காய் ஏங்கி
தவமிருக்க...

முழுமதியாய் நீ
உன்னில் நிரம்பி
வலிந்த ஒளி பட்டு
ஆற்று நீரும் சற்று
குளிர்ந்து காற்றுடன்
சேர்ந்து இதமாய்
வீச...

இன்னும் அதிகமாய்
நினைவூட்டுகிறது
அவள் இல்லாத
அந்த கொடுமையான
தனிமையை...


   - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

பனிப்பொழிவு

By : Unknown







இயற்கை அன்னையின்
இடப்பெயர்ச்சி
இவ்வுலகில் அங்காங்கே
இன்று பனிப்பொழிர்ச்சி

பகலவனும் ஓய்வெடுக்க
என்னினானோ
பரனியெங்குமே ஒரே
குளுமை புரட்சி

வெண்நிற மேகமும்
உறைந்ததால்
காய்கிறதே, சறுகாகி
உடைந்து

சிதறி சொறிகிறது
பனித்துகள்களாய்,
குளிர் வீசும் தென்றலோடு
ஊசிமுனை சாரலாய்

பஞ்சு மேனியை வெண்பனி
துகல்கள் மூடிக்கொள்ள
உடலோ தேடுது விறகொண்டு
எறித்த தணலடுப்பை

பாதைகளெங்கும் பச்சைத்
தாவணியனிந்த மரங்கள்
ஆடைகளைந்தவள் போல
தோற்றமளிக்க

சிறுக சிறுக சேர்ந்து
பனித்துகல்கலாள்
தொப்பியணிந்துள்ளன
மரமும், வீட்டுக்கூரையும்

நாகரீகமென அரை குறையில்
அலைந்தவரெல்லாம்
இழுத்து மூடிக்கொள்ள கம்பளி
தேடியலைகின்றனர்


            - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

விடா முயற்சி

By : Unknown











ஊரார் சிலர்
ஊனமென ஒதுக்கினர்
தானே சிலர்
ஊனமென ஒதுங்கினர்

கைத்துனை
ஒன்று கொண்டு
நடந்து வந்தவனும்
சற்று நேரத்தில்
சில்லரைக்காய்
சாலையோரம் கையேந்த

சாதிக்கவேண்டுமென நீயும்
சாலையிலோடுகின்றாய்
உணர்ச்சியுள்ள யொன்றையும்
உணர்வற்ற மற்றொன்றை
ஊண்டு கோலாகவும்
கொண்டு

அடுத்தவன் ஒனக்கு
ஊக்கமளிப்பான் என்று
ஒரு போதுமென்னாதே
நீயே
உனக்கு தைரியமளி
உன்னை மட்டுமே
முழுதாய் நம்பு

ஒட்டுன்னியாய்
இன்னொருவனில்
ஒட்டி இருப்பதை விட
ஒற்றைக் காலாயினும்
உன் காலில் துனிந்து நில்

அடிபட்டவனெல்லாம்
வீழ்ந்து கிடைக்கையில்
புதிய தளிர் விட்டு
எழுச்சி பெறவந்தவன்
நீ...

பெற்றெடுத்த அந்த தாயும்
வளர்த்தெடுத்த இயற்க்கை
உனக்காய் இங்கிருக்க
ஊனமென்பது ஒரு
குறையல்லவே

முயற்சியே உன்னை
பூரண மனிதனாக்கும்
முயன்று கொண்டேயிறு
முற்றுப் பெறாது யென்றும்
வெற்றி...


            - முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்

ஏழை வாழ்வு

By : Unknown












அன்னார்ந்து பார்த்து
அடுத்தவன் ஏங்கும்
அன்பு நிறைந்த
அழகான வாழ்க்கை
அந்த ஏழை வாழ்வு...

ஆயிரக்கணக்கில்
ஆண்டு தோரும்
ஆஸ்தி சம்பாதிப்பவன்
ஆழ்ந்து உறங்கியதில்லை
ஆறு நொடி கூட
ஆறுதலாக...

இன்பகரமாக
இனைந்து கொண்ட
இந்த உண்னதமான
இரண்டு ஜீவன்கள்...

ஈகை கொடையாளன்
ஈரைந்து மாதத்தில்
ஈன்ரெடுக்க கொடுத்தான்
ஈகையாக குழந்தையை...

உழைப்பே என்றும்
உயர்வு தரும் - துனை
உடனிருக்க இந்த
உலகிலே வேரென்னதான்
உயர்ந்த சொத்தாக வேனும்...

நிம்மதியும், இன்பமும்
நித்தம் நித்தம்
நிலைபெருவதும்
நிசப்தங்கள்
நிலவுவதும் இங்கே தான்...

புன்முறுவலோடு
புசிப்பதும்
புன்னகையோடு
புறப்படுவதும் இங்கே...

கட்டாந்தரை கூட
கனப்பொழுதினில் தந்திடும்
கவலையில்லாத ஆழ்ந்த
கண்ணுரக்கம்...


       -முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்

ஏழை வாழ்க்கை

By : Unknown











சிற்றின்பம் செரிந்ததடி
நம் வாழ்க்கை
சீரான நெடுஞ்சாலை
போலே...

மக(னை)ளை முன்னேற்றி
பின் உனை அமரவைத்து
நான் மிதிக்க அழைத்துச்
செல்லும் நம் மிதிவண்டி

ஆயிரம் பொன்
கொடுத்தும்
பெற முடியுமா ??
செல்வந்தன் வாழ்வில்

கஞ்சியோ, கூலோ
குடித்து வாழ்ந்தாலும்
அடுத்தவன் குறை
கூறாத வாழ்க்கை

"ஏழை வாழ்க்கை"


        - முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்

ஜோசியம்

By : Unknown










என்னிரு சிறகு தரித்து
என்னுலக சுதந்திரம் பறித்து
கம்பிகள் கொண்ட கூட்டினுள்
என்னையடைத்து..

பகுத்தறிவு கொண்ட
ஜென்மமொன்று
பாதக, சாதகம் கேட்கிறது...

படைத்தவனில் கொண்ட
நம்பிக்கையை இழந்து
நான் எடுக்கும் சீட்டில்
உள்ளவற்றை நம்பி
எதிர்காலம் கனிக்க
கிழம்பிய கூட்டம்

ஆறாம் அறிவு கொண்ட
உன்னாலே அறிய
முடியாதொன்றை
ஐந்தறிவு கொண்ட
என்னிடம் அறிய
வந்த மூடர்கள்
கொஞ்சம்...

என்னை சிறையிலிட்டவன்
சம்பாதிக்க சொல்லும்
சாதகங்களை நம்பி
வாழ்க்கையில் சாதிக்க
தவறியவன் எத்தகைய
மதி கெட்டவன்

சிறையில் பசித்திருந்த
என்னை திறந்ததும்
பழமென நினைத்து
உண்ணத் தூக்கியதை
பறித்தெடுத்து கூறுகிறான்..
வந்தவருக்கு பாதக, சாதகம்

எப்போது கிடைக்குமோ
இந்த கிளிக்கு சுதந்திரம்..

எப்போது மறையுமோ
மானிடர்களின் மூடத்தனம்..

சோம்பேறித்தனம் உள்ளவரை
கூண்டுக்கிளிகளும்,
மூடப்பழக்கமும்,
இயலாமையும்,
ஏமாற்றமும் தான்
நிறைந்திருக்கும்
"வாழ்வில்"

 
     - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்


இலஞ்சம்

By : Unknown












உயிரற்ற இந்த
அட்டைப் புழுக்களை
அழிப்பதென்பது
ஏனோ !
கேள்விக்குறி தான்

இரத்தம் உறிஞ்சும்
அட்டையை கூட
இலகுவில்
கழட்டி விட முடியும்
இந்த லஞ்சத்தை
குடிக்கின்ற அட்டைகளை
ஒழிப்பதென்பது
??????????

மறைவாக செய்த
காலம் போய்
கட்டாயம்
கொடுத்தால் தான்
காரியம் நிறைவேரும்
என்ற கட்டம்
இன்று...

தாய், பிள்ளை
பாசத்தை கூட
தாங்கிப்படிப்பது
லஞ்சம் என்னும்
போது தான் தாங்குதில்லை
நெஞ்சம்...

சமூகத்தில் ஒட்டி
இருக்கும்
உயிரற்ற அட்டையை
ஒழிப்பதென்பது
அவர் அவர்
பெறுவதை
விடுவதில் தான்
உள்ளது...

      ***   ***

  - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -