அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Friday, February 28, 2014














பேயாப் பெருமழை
ஓயாமல் பெய்யுது !

விழைந்த கதிர்கள்
மழையிலே நனையுது
நிறைந்த வயல்கள்
அழிந்து மடியுது!

முற்றிய நெல் மணி
ஈற்றிலே சிந்திச் சிதறுது
வெட்டிய உப்பட்டி
மிதந்து தெரியுது!

அறுவடைக் கால
மழை, அங்கே
ஆட்களின் அல்லோல
நிலை கண்டேன்!

அழகான வயலிலே
அலங்கோலக் காட்சி
எப்போது இனி மீட்சி ?

அழுகின்ற வானின்
அழுகையை நினைத்து
அழுகிறான் விவசாயி
தொழுகிறான் இறையை
இருகரம் ஏந்தி!

படுகடன் எங்கனம்
கட்டி முடிப்பான்
நனை வயல் எப்போ
வெட்டி அடிப்பான்?

உடுதுணி மட்டும்தான்
எஞ்சுமோ அச்சம்
எடுபிடி வேலை
மட்டுமே மிச்சம்!

வெட்டிய வயல்
ஊறுது நீரில்
பட்டி மிசின் விலை
ஏறுது பேரில்!

சுருட்டிய சாக்கு
சுருண்டு கிடக்கிறது
இருட்டிய வானம்
முரண்டு பிடிக்குது!

வெள்ளம் எப்போது
வடியும் ,இவன்
உள்ளம் எப்போது
விடியும்?

இறை நினை அழுதிலார்
இறைவனை தொழுதிலார்
முறையீடு செய்கிறார்!


                       -உமர் அலி முகம்மதிஸ்மாயில்
  • எனது பிரதேசத்தில் இப்பொழுது நெல்வயல்களின் அறுவடைக்காலம் அறுவடை ஆரம்பித்து அரை குறையாக இருக்கின்ற பொது திடீரென் மூன்று நாட்களாக பெரும் மழை!
           இந்த விவசாயிகளின் நிலை நினைத்தே இக்கவிதை!

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -