- Back to Home »
- அஸ்ரப் ஹான் , ஏனையவை »
- பௌர்ணமி நிலவு
Posted by : Unknown
Saturday, February 15, 2014
ஓடி ஓடி வேலை செய்ததில்
கலைத்துப் போன மேகம்
கலைந்து போகுது...
வயது முதிர்ந்து போன இலை
கூட கிளையை விட்டு
உதிர்ந்து போகுது...
ஆசையாய் நான் கண்டு ரசித்த
வானவில் கூட சாயம் இழந்து
தொலைந்து போகுது...
மெதுவாக ஒழிந்து கொண்டு
ஓய்வாக தூங்கவே சூரியனும்
மறைந்து போகுது...
எதிரி போலே சொல்லிக் கொள்ளாமல்
பகல் கூட பூமியை விட்டு
விலகி போகுது...
அழையாத விருந்தாளியாக
மெல்லிய இருளுடனே இரவும்
நெருங்க போகுது...
நட்சத்திரங்கள் கூட தங்க
மீன்களாய் வானை அலங்கரிக்க
சிதற போகுது...
வெட்டிப் போட்ட நகமாய்
கிடந்த நிலவு கூட இன்று
பௌர்ணமியாக போகுது...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்