- Back to Home »
- அஸ்ரப் ஹான் , வாழ்க்கை கவிதை »
- மனைவி
Posted by : Unknown
Saturday, February 22, 2014
புத்தம் புதிதாய்
பூத்த வாழ்க்கைப்
பயணத்தின் புதிய
உறவு -
மனைவி.....!
தாய் அன்பை
திரும்ப தரும்
தன்னிகரில்லா
தாரம் -
மனைவி.....!
உன் கரம் பிடித்த
நாள் முதலாய்
என் கை கோர்த்து
நடந்த பயணம் -
மனைவி.....!
நிஜத்தை உணரவைக்க
நிழலாயும் கூடவே
என்னுயிராகவும்
வந்தவள் -
மனைவி.....!
தோளோடு
தோள் சாய்க்க
தோழனைப் போல்
தோள் கொடுப்பவள் -
மனைவி.....!
பிறந்த மனைப்
பாசத்தினை துறந்து
புகுந்த மனையில்
எனக்காக முகம்
மகிழ்பவள் -
மனைவி.....!
பார்வை மொழிபேசி
என் தேவைகளை
உணர்ந்து கொண்டு
நிறைவற்றுபவள் -
மனைவி.....!
இல்லறத்தினை
நல்லறமாய் மாற்றி
இன்புற செய்யும்
இன்பம் -
மனைவி.....!
அள்ள அள்ள
குறைவில்லாத அன்பை
ஒளியாக அள்ளிதரும்
நிலவு -
மனைவி.....!
பாசதினை மட்டுமே
நிறைத்து சீதனமாய்
கொண்டு வந்த
அட்சய பாத்திரம் -
மனைவி.....!
வாழ்வில் வசந்தம்
வீசுகின்ற தென்றலாய்
வாசல் தேடி வந்த
சொந்தம் -
மனைவி.....!
வேலையில் இரவில்
தாமதமாக வந்தாலும்
உண்ணாமல், உறங்காமல்
காத்திருப்பவள் -
மனைவி.....!
வெளியில் சென்றாலும்
ஓயாத அழைப்புகளால்
என் நலன் பேனும்
அக்கறை கொண்டவள் -
மனைவி.....!
வாழ்க்கையில் இடர்பாடுகளை
சந்திக்கின்ற வேலைகளில்
தலை கோதி தட்டி
கொடுப்பவளும் -
மனைவி.....!
என்னை தகப்பனாக்கி
என் சந்ததிகளை
வளர்க்க நீர்
ஊற்றாய் இருப்பவள் -
மனைவி.....!
உறவுகள் பல கடந்தும்
மனைவியெனும் உயிரிலும்
மேலான உறவை அளிக்க
இருக்கும்
"இறைவனுக்கே நன்றிகள்"
- முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்