- Back to Home »
- அஸ்ரப் ஹான் , நடப்புக்கவிதை , வாழ்க்கை கவிதை »
- வறுமை
Posted by : Unknown
Tuesday, February 25, 2014
சோறு இல்லாத
தட்டுடன்
தேகம் மறையாத
ஆடையுடன்...
ஏக்கத்துடன் உலவும்
என் கண்கள்
எதையுமே அலட்டிக்காத
என் பார்வை...
வறட்சியான உதடுகள்
வற்றிய ஒட்டிய வயிறு
வறுமையில் கையேந்தியும்
வராத உதவிகள்...
வறுமை மட்டுமே
செழுமையாக எங்கும்...
வயிற்றுப்பசி போக்கிட
வழி ஏதும் இல்லாமல்
வறுமைக்குள் சிக்கி
வலியில் தவிக்கிறேன்...
தாகமும் தாங்காமல்
தரையை முத்தமிட
தயாராகி தாழ்கிறது
தலையதும்...
குழாய் நீராவது
குடித்திடலாம் என
குந்தியே கிடக்கிறேன்
குடுப்பாயா கொஞ்சமாவது...
செல்வம் கொட்டிக்கிடந்தும்
செம்மலாய் சீர்செய்யாத நீ
செழிப்பற்ற கஞ்சத்தனத்தால்
செறிந்த சர்வாதிகாரி...
வறுமை கொடியது - அது
வல்லமையுடன் ஆட்டிவைக்கிறது
வழி தவறும் மனிதத்தையும்
வளர்த்து விடுகிறது...
ஆயுள் குறைந்த மானிடமே
ஆகாரம் தேடுவோரை
ஆதரவாகவே நீயும்
ஆதரித்தாலே வறுமை அகன்றிடும்...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்