- Back to Home »
- அஸ்ரப் ஹான் , ஏனையவை »
- தபால்
Posted by : Unknown
Sunday, February 9, 2014
உள்ளாசமாய் சேதிகளை
சுமந்து வந்தாய்...
உள்ளங்களோ வார்த்தை தேடி
உயிர் கொண்டு தீட்டிய
காவியமாய்...
ஒவ்வொரு முறையும்
உயிர்ப்பிக்கும் உன்னதம்
தாயே...
கடிதங்கள் இனிமையானது
உண்மையானது இதயங்களை
வரிகளுக்குள் சுமப்பதால்...
தபாலில் வரும் சந்தோசங்களை
இன்றைய மின்னஞ்சலும், அரட்டையும்
தந்துவிடாது...
உரிமையுடன் பாரமிட்டோம்
நீ சுமப்பதால் தான்
கடிதங்களை...
சில நேரம் உறவுகளுக்காய்
ஓலையும் அனுப்பி
வைத்தோம்...
உயிரற்று நடமாடும் கடிதங்களை
பிரசவிக்கும் தபால் அன்னையே...
உனக்காய் வாயில் கதவோரம்
எதிர்பார்த்துக் காத்திருந்த
நாட்கள் எத்தனையோ...
இன்று வந்துவிடும் என்ற நம்பிக்கை
ஒவ்வொரு முறை உன்னைக்
கடக்கும் போதும்...
சமூதாய சிற்பியின்
சிலையான சிகப்பு
காவியம் நீ...
முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்