அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 9, 2014














மணாளனை
மரணம் என்னும்
கொடுங்கோலன்
பறிக்கையில்
பதைபதைக்கும்
உள்ளத்தோடு
பரிதவித்து நிற்பவள்
விதவை !

உன்னத உறவைப்
பிரிந்து குழந்தைகளின்
அப்பா எப்போ வருவார்
எனும் வினாவிற்கு
விடை பகிர முடியாமல்
கண்ணீரோடு நிற்பவள்
விதவை !

எந்த முடிவும் எடுக்க
நாதியற்று கணவனின்
பாதம் சுவனமென
வாழ்ந்தவளை
அட்டவணை போட
அழுத்தப்பட்டவள்
விதவை !

கணவனின் நினைவுகளை
அசை போட்டு நான்கு மாதங்களும்
பத்து நாட்களும்
கடக்க முயல்பவள்
விதவை !

தான் பெற்ற செல்வங்களின்
எதிர் கால வாழ்விற்காக
தன் சோகங்களை
தள்ளி வைத்து
நல்ல தாயாக
பரிணமிப்பாள்
விதவை !

கடமைகள் கட்டுக்கட்டாய்
கிடந்தாலும்
நம்பிக்கை என்னும்
தும்பிக்கை கொண்டு
தடைகளை தாண்டி
தடம் பதிப்பாள்
விதவை !

கணவனின் வாக்கினை
தன் நிகரில்லா
அன்பினால்
சிரமே கொண்டு
அவனை நெஞ்சிலே
சுமந்து வாழ்வாள்
விதவை !

நம் சமூகத்தில் வாழும் விதவைகளிற்கு
சமர்ப்பணம் செய்கிறேன் .


இவள் உங்கள் தோழி
- றமீஸா மொகீடீன் .

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -