அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 9, 2014




என் மனக்கிளையில்
முதல் பூத்த மல்லிகையே
பொன் மாணிக்கத்தால்
செதுக்கப்பட்ட பெண் சிலையே

உன்னை காண துடிக்கிறது
கண் விழிகள்
மூட மறுக்கிறது
என் இமைகள்
தொட்டணைக்க நினைக்கிறது
என் மனம்
சுட்டெரிக்கிறது...
உன் மௌனம்
விட்டு விடு
என்று நினைக்க
காதல் ஒன்றும்
காற்றாடி நூலல்ல கண்ணே

வித்திட்டவன் நான்தான்
விலகி நிற்பவள்
நீதான் பெண்ணே
என் காதல் விதையாகி
முளையாகி
ஆழ விருட்சமாய்
அசை எனும்
விழுதுகளோடு...
அதை சுக்கு நூறாகி
சுட்டெரித்து
அதில் தீ மிதிக்க
நான் கடவுள் பக்தன் அல்ல
காதல் பித்தன் பெண்ணே

      - கணேஷ் கஜினி 

{ 1 கருத்துக்கள்... read them below or add one }

  1. மிக்க நன்றி சகோதரர் அஸ்ரப்கான்

    ReplyDelete

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -