- Back to Home »
- அஸ்ரப் ஹான் , நடப்புக்கவிதை »
- கருக்கலைப்பு
Posted by : Unknown
Friday, March 7, 2014
பருவ மயக்கத்தில்
பழகிய மோகத்தில்
உன்னுள் சீறியெழுந்த
கார்மோன் வேகத்தில்
வீழ்ந்துவிட்டாய் நீயும்
கச்சிதமாய்
அவன் வீசி விரித்த
காதலெனும்
வலையில்
காதலெது,
இச்சையெது,
பகுத்தறிய முடியாது
வயதிலே
தவறியும் விட்டாய்
வாழ்க்கையை
பெண்ணியம்
காத்துப் போற்ற
வேண்டிய உனை
தூற்றுவர்
இந் நிலைக்காய்
சிற்றின்பத்தின்
நினைவாக
கருவறையை
தாழிட்டு ஓர்
கல்லறை
நிறுத்து!
நீ உட்கொள்வது மருந்தல்ல
கருவறையில் கல்லறை
கட்ட கச்சிதமாய் அனுப்பும் செங்கட்டிகள்!
குற்றம் செய்தது நீ
தண்டனை மட்டும்
குழந்தைக்கா?
ஆபத்து என்றால்
தன்பிள்ளை
அம்மாவை நாடும்
அம்மாவே ஆபத்து
என்றால்,
அதன் மனம் வாடும்.
நீ அரக்கனிலும்
கொடியவள்,
அரக்கன் கூட
குழந்தைகளை
பிறந்த பின்தான்
கொன்றான்.
நீ பிறக்கும்
முன்னமே
அழிக்கின்றாய்.
பிறப்புச்சான்றிதழை
எதிர்பார்த்திருக்கும்
குழந்தைக்கு இறப்பைச்
சான்றிதழாகக்
கொடுப்பது என்ன
நியாயாம்?
பிறந்தவுடன் சுதந்திரம்
பறிபோவது வழமை
பிறப்பதற்கே சுதந்திரம்
மறுக்கப்படுவது கொடுமை
ஆட்சி கலைந்தால்
அடைந்துவிலாம்
அடுத்த ஐந்தாண்டில்
அமைச்சு பதவியை
கருவைக் கலைத்தால்
தாய்மை நிலையை
எந்தாண்டிலும்
அடைய முடியாது.
மறுமுறை
உரைக்கின்றேன்..
அதுன்னை
உருக்குலைக்கும்
என்பதை
உணர்ந்துவிடு
-முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்