- Back to Home »
- நடப்புக்கவிதை , முகம்மதிஸ்மாயில் »
- நிலவு
Posted by : Unknown
Tuesday, March 11, 2014
விழுந்தாயோ வெண்ணிலாவே ?
பிடித்து உனையாரும்
தள்ளினரோ சொல்லுவாயா ?
உயிரை மாய்க்க நீ
வீழ்ந்தாயோ
எனை பார்க்க
நீரில் தவழ்ந்தாயோ ?
துரத்த துரத்த ஓடுகிறாய்
துடித்து துடித்து நீ ஆடுகின்றாய் !
தூர நின்று நீ சிரிக்கின்றாய்
ஓரக் கண்ணடித்து அழைக்கின்றாய்!
தங்கத்தட்டு மிதக்குதடா
நீரில் பட்டு தெறிக்குதடா
நெஞ்சைத்தொட்டு
இழுக்குதடா!
அள்ளிப்பார்த்தேன் உள்ளங்கையில்
அதில் ஆடும் வதனம் தெரிந்ததடா !
ஊஞ்சலொன்று ஆடுதடா
காணும்போது
சஞ்சலங்கள் தீருதடா!
- உமர் அலி முகம்மதிஸ்மாயில்
அருமை..அருமை.. பாரதியாரை நினைவு படுத்தி செல்கிறது இக்கவிதை.. வாழ்த்துக்கள் !!
ReplyDelete