Archive for February 2014
பேயாப் பெருமழை ஓயாமல் பெய்யுது !
By : Unknown
பேயாப் பெருமழை
ஓயாமல் பெய்யுது !
விழைந்த கதிர்கள்
மழையிலே நனையுது
நிறைந்த வயல்கள்
அழிந்து மடியுது!
முற்றிய நெல் மணி
ஈற்றிலே சிந்திச் சிதறுது
வெட்டிய உப்பட்டி
மிதந்து தெரியுது!
அறுவடைக் கால
மழை, அங்கே
ஆட்களின் அல்லோல
நிலை கண்டேன்!
அழகான வயலிலே
அலங்கோலக் காட்சி
எப்போது இனி மீட்சி ?
அழுகின்ற வானின்
அழுகையை நினைத்து
அழுகிறான் விவசாயி
தொழுகிறான் இறையை
இருகரம் ஏந்தி!
படுகடன் எங்கனம்
கட்டி முடிப்பான்
நனை வயல் எப்போ
வெட்டி அடிப்பான்?
உடுதுணி மட்டும்தான்
எஞ்சுமோ அச்சம்
எடுபிடி வேலை
மட்டுமே மிச்சம்!
வெட்டிய வயல்
ஊறுது நீரில்
பட்டி மிசின் விலை
ஏறுது பேரில்!
சுருட்டிய சாக்கு
சுருண்டு கிடக்கிறது
இருட்டிய வானம்
முரண்டு பிடிக்குது!
வெள்ளம் எப்போது
வடியும் ,இவன்
உள்ளம் எப்போது
விடியும்?
இறை நினை அழுதிலார்
இறைவனை தொழுதிலார்
முறையீடு செய்கிறார்!
ஓயாமல் பெய்யுது !
விழைந்த கதிர்கள்
மழையிலே நனையுது
நிறைந்த வயல்கள்
அழிந்து மடியுது!
முற்றிய நெல் மணி
ஈற்றிலே சிந்திச் சிதறுது
வெட்டிய உப்பட்டி
மிதந்து தெரியுது!
அறுவடைக் கால
மழை, அங்கே
ஆட்களின் அல்லோல
நிலை கண்டேன்!
அழகான வயலிலே
அலங்கோலக் காட்சி
எப்போது இனி மீட்சி ?
அழுகின்ற வானின்
அழுகையை நினைத்து
அழுகிறான் விவசாயி
தொழுகிறான் இறையை
இருகரம் ஏந்தி!
படுகடன் எங்கனம்
கட்டி முடிப்பான்
நனை வயல் எப்போ
வெட்டி அடிப்பான்?
உடுதுணி மட்டும்தான்
எஞ்சுமோ அச்சம்
எடுபிடி வேலை
மட்டுமே மிச்சம்!
வெட்டிய வயல்
ஊறுது நீரில்
பட்டி மிசின் விலை
ஏறுது பேரில்!
சுருட்டிய சாக்கு
சுருண்டு கிடக்கிறது
இருட்டிய வானம்
முரண்டு பிடிக்குது!
வெள்ளம் எப்போது
வடியும் ,இவன்
உள்ளம் எப்போது
விடியும்?
இறை நினை அழுதிலார்
இறைவனை தொழுதிலார்
முறையீடு செய்கிறார்!
-உமர் அலி முகம்மதிஸ்மாயில்
- எனது பிரதேசத்தில் இப்பொழுது நெல்வயல்களின் அறுவடைக்காலம் அறுவடை ஆரம்பித்து அரை குறையாக இருக்கின்ற பொது திடீரென் மூன்று நாட்களாக பெரும் மழை!
இந்த விவசாயிகளின் நிலை நினைத்தே இக்கவிதை!
நாக்கு
By : Unknownவாயில் வசிக்கின்றது
உமிழ் நீரில் இருக்கின்றது
பல சமயங்களில் பிறர்
உணர்வை சிதைக்கின்றது...
சொல்லால் அம்பு தொடுக்கும்
ஐம்புலன்களின் ஒன்று
சொற்களையும் சரலமாய்
அள்ளித் தெளிக்கும்...
உமிழ் நீரிலே நீராடுகிறது
நினைத்ததுமே வெளிவருகிறது
எலும்பினை கொண்டிராத ஜாதி..
உடலிலே ஒரு பாதி...
பற்கள் சுற்றி காவலிருக்க
சுவை முற்களும் மேலிருக்க
எளிதிலே உணர்ச்சி வயப்படும்
ஒரு வியாதி...
உணவை அரைக்க உதவும்
நரம்பில்லா கருவி
பற்களை தாண்டி வந்து
கொட்டிடும் குளவி...
காவலிருக்கும் பற்களையும்
கடைக்கண் பார்வையால்
ஏமாற்றி விட்டு...
சத்தமும் இன்றி..
இரத்தமும் இன்றி..
யுத்தமும் இன்றி..
காயப்படுத்தும் வித்தை
கொண்ட கெட்டிக்காரன்...
இயற்கை தந்த ஆயுதம்
உறைக்குள்ளே புகழிடம்
என்றும் இருட்டறை தான்
இதன் உறைவிடம்...
ஆறடி உடலுள்ள என்னையே
அறையடி உடலால் சாய்க்க
தீக்குச்சி கூட இல்லாமல்
தீ மூட்டி விட்டது...
நன்றி உள்ளது, நஞ்சும் கொண்டது
அதனால் தான் என்னவோ
வாயினுள் அடைபட்டுள்ளது...
தன் கட்டுப்பாட்டில் எப்படி
வைத்திருப்பது என்பதே
மனிதன் கொண்டுள்ள
பெரும் கவலை...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
மயிர்க்கொட்டி
By : Unknown
சித்திரைப் புழுக்கம்
வியர்த்து வடியும் நாட்கள்
பூவரசம் பட்டைகளில்
சித்திரம் ஓட்டினால்போல்
ஆரவாரமின்றி அசைகின்ற
புழுக்கூட்டம்!
கிட்ட நெருங்கி
உற்று நோக்கினால்
உண்மை தெரியும் புழு
நெளிவதும் புரியும்!
பட்டுப்போல உடம்பிலே
பட்டவுடன் எரித்து விடும்
கூரியங்கள் வீரியமாய்
நீட்டிக்கிட்டு நிற்குது
உன்னை பயமுறுத்திப் பார்க்குது!
சண்டைக்கு தயார்போல
சிலிர்த்து கொண்டு நிற்குமே
முண்டக் கண் கொண்டு
முறைத்துத்தான் பார்க்குமே!
இலைகளின்கீழ் ஒருகூட்டம்
ஒழிந்திருக்க மரக்
கிளைகளில் ஒருபாட்டம்
மறைந்திருக்கும்!
பார்த்திடும் போதே பயங்காட்டும்
அதைக் கண்டால் யாரும்
மரப் பக்கம் வராமலே ஒரே ஓட்டம்!
காற்றிலே அசைந்திடும் கிளை
புழு உமிழ்நீரால்
பின்னிடும் இழை !
இழையிலே இறங்கிடும் புழு
உன் முகத்தில் தாவிடும்
சில பொழுது!
அழகான அன்னைக்கு
அவலட்சணப் பிள்ளை
அருகாலே சென்றிட
யாருமே இல்லை!
முட்டையிலே மயிரிலே
ஆனால் அதன்
குட்டியிலே மயிருண்டு
ஆண்டவனின் அற்புதம் இது
ஏட்டிலுள்ள தத்துவம்!
முருங்கையும் ,மாதுளையும்
வாழிடமாச்சு முட்டை
பொரித்து வளரிடமாச்சு!
கூடு கட்டும் முன்னர்
கோடு போட்டு போயிடும்
கூட்டுக்குள்ளே போனபின்
கூரியங்கள் விழுந்திடும்!
நடமாட்டம் கூடினால் கொல்ல
நடவடிக்கை எடிப்பார் நல்ல தீ
பந்தங்கட்டி பொசுக்குவார்
கந்தை வெட்டி அகற்றுவார்!
நஞ்சடித்துக் கொன்றவர்
இன்று கூடடித்து வளர்கிறார்!
வண்ணத்தி அழிந்தது
வண்ண நிறங்களெல்லாம் மறைந்தது
மசுக்குட்டான் காணல
இனம் பொசுங்கிட்டோ தோணல!
வியர்த்து வடியும் நாட்கள்
பூவரசம் பட்டைகளில்
சித்திரம் ஓட்டினால்போல்
ஆரவாரமின்றி அசைகின்ற
புழுக்கூட்டம்!
கிட்ட நெருங்கி
உற்று நோக்கினால்
உண்மை தெரியும் புழு
நெளிவதும் புரியும்!
பட்டுப்போல உடம்பிலே
பட்டவுடன் எரித்து விடும்
கூரியங்கள் வீரியமாய்
நீட்டிக்கிட்டு நிற்குது
உன்னை பயமுறுத்திப் பார்க்குது!
சண்டைக்கு தயார்போல
சிலிர்த்து கொண்டு நிற்குமே
முண்டக் கண் கொண்டு
முறைத்துத்தான் பார்க்குமே!
இலைகளின்கீழ் ஒருகூட்டம்
ஒழிந்திருக்க மரக்
கிளைகளில் ஒருபாட்டம்
மறைந்திருக்கும்!
பார்த்திடும் போதே பயங்காட்டும்
அதைக் கண்டால் யாரும்
மரப் பக்கம் வராமலே ஒரே ஓட்டம்!
காற்றிலே அசைந்திடும் கிளை
புழு உமிழ்நீரால்
பின்னிடும் இழை !
இழையிலே இறங்கிடும் புழு
உன் முகத்தில் தாவிடும்
சில பொழுது!
அழகான அன்னைக்கு
அவலட்சணப் பிள்ளை
அருகாலே சென்றிட
யாருமே இல்லை!
முட்டையிலே மயிரிலே
ஆனால் அதன்
குட்டியிலே மயிருண்டு
ஆண்டவனின் அற்புதம் இது
ஏட்டிலுள்ள தத்துவம்!
முருங்கையும் ,மாதுளையும்
வாழிடமாச்சு முட்டை
பொரித்து வளரிடமாச்சு!
கூடு கட்டும் முன்னர்
கோடு போட்டு போயிடும்
கூட்டுக்குள்ளே போனபின்
கூரியங்கள் விழுந்திடும்!
நடமாட்டம் கூடினால் கொல்ல
நடவடிக்கை எடிப்பார் நல்ல தீ
பந்தங்கட்டி பொசுக்குவார்
கந்தை வெட்டி அகற்றுவார்!
நஞ்சடித்துக் கொன்றவர்
இன்று கூடடித்து வளர்கிறார்!
வண்ணத்தி அழிந்தது
வண்ண நிறங்களெல்லாம் மறைந்தது
மசுக்குட்டான் காணல
இனம் பொசுங்கிட்டோ தோணல!
-உமர் அலி முகம்மதிஸ்மாயில்
Tag :
கிராமிய கவிதை,
முகம்மதிஸ்மாயில்,
வறுமை
By : Unknownசோறு இல்லாத
தட்டுடன்
தேகம் மறையாத
ஆடையுடன்...
ஏக்கத்துடன் உலவும்
என் கண்கள்
எதையுமே அலட்டிக்காத
என் பார்வை...
வறட்சியான உதடுகள்
வற்றிய ஒட்டிய வயிறு
வறுமையில் கையேந்தியும்
வராத உதவிகள்...
வறுமை மட்டுமே
செழுமையாக எங்கும்...
வயிற்றுப்பசி போக்கிட
வழி ஏதும் இல்லாமல்
வறுமைக்குள் சிக்கி
வலியில் தவிக்கிறேன்...
தாகமும் தாங்காமல்
தரையை முத்தமிட
தயாராகி தாழ்கிறது
தலையதும்...
குழாய் நீராவது
குடித்திடலாம் என
குந்தியே கிடக்கிறேன்
குடுப்பாயா கொஞ்சமாவது...
செல்வம் கொட்டிக்கிடந்தும்
செம்மலாய் சீர்செய்யாத நீ
செழிப்பற்ற கஞ்சத்தனத்தால்
செறிந்த சர்வாதிகாரி...
வறுமை கொடியது - அது
வல்லமையுடன் ஆட்டிவைக்கிறது
வழி தவறும் மனிதத்தையும்
வளர்த்து விடுகிறது...
ஆயுள் குறைந்த மானிடமே
ஆகாரம் தேடுவோரை
ஆதரவாகவே நீயும்
ஆதரித்தாலே வறுமை அகன்றிடும்...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
திரும்பாத இளமை பருவம்
By : Unknown
தென்னம் மட்டைவெட்டி
அதில் வண்டில் மாடு கட்டிஅண்ணனும் தம்பியும்
வீதியில் இழுத்து திரிந்துக்கிட்டு
பனை நுங்கு வெட்டி
கெண்டித்தின்ற பின்பு
ரெண்டு நுங்கிணைத்து
வண்டி ஒன்று செய்து
இடுக்கு முடுக்கெல்லாம்
கொண்டு சென்றிடுவோம்!
பழைய வளையமும்
சிதைஞ்சிபோன
டயர்களும் எங்களது
வாகனங்களாய் இருந்தன !
முடியப்பட்ட
கயிற்று பேரூந்துகளில்
செருப்பணியா கால்களுடன்
தெருக்கோடிவரை
ஓடி மகிழ்ந்திடுவோம்!
சாரதியின் கைகளிலே
பிரம்பு வளையம்
கற்பனையால் கைகளில்
வளைந்து நடனமாடும் !
ஒருவர் முன்னிழுக்க
ஒருவர் பின்னாலிழுக்க
இடைப்பட்ட சின்னவர்கள்
முன்னவரைப் பின்பற்ற
கயிற்றுப் பேரூந்து
முச்சந்தி கடந்து செல்லும்!
பீப் பீப்
என்ற சாரதியின் சத்தம்
பாதையிலே போவோரை
ஓரம்போகச்சொல்லும்!
வாயால் உமிழ் நீரை
உமிழ்ந்து கொண்டு
காலால்
ஊரெல்லாம் சுற்றிவரும்
கயிற்றுப் பேரூந்து!
கயிறறுந்தால்
காற்றுப்போனதாய் அர்த்தம்
கயிறிழுத்தால்
இறக்கமிருப்பதாய் கருத்து !
திடீரென
திசைமாறும் வேளை
சிலர் குப்புற விழ
தரையைத் தாக்கிய
முழங்காலின் மூக்கில்
குருதி வடியும்!
சொல்லாமல்
வண்டி திடீரென நிற்க
நடுவிலே நிற்பவர்
ஆளுக்காள் முட்ட
பின்னந்தலையும்
நுனிமூக்கும் நச்சென
முத்தமிட்டுக்கொள்ளும் !
இதுபோல
அடிச்சான் பிடிச்சி
ஒளிந்தவனை
கண்டுபிடிச்சி
கள்ளன் போலீசென்றும்
கபடி ,எல்லைஎன்றும்
துள்ளி விளையாடி
மகிழ்ந்திருக்கும் நாட்களிலே!
துவக்குச் சுடுவதும்
குண்டு வெடிப்பதும்
அட்டாக்கு பண்ணிக்
கொண்டு அடி பிடி நடத்துவதும்
படிப்படியாய் வந்து சேர்ந்தது!
வீதியிலே கண்டது
செய்தியிலே கேட்டது
டீவியிலே பார்த்தது
வாழ்வினிலே இணைந்தது!
அடியோடு மறந்தோம்
அத்தனை விளையாட்டும்
படியேறிக் கடந்தோம்!
விளையாட்டு மட்டும்
மாறல எங்கள்
மன நிலையும்
மாறியது !
பசுமை பறந்து செல்ல
பொசுக்கும் பண்புகள்
தொற்றிக் கொண்டது
மனங்கள் எரிந்து
பற்றிக்கொண்டன
கொஞ்சல்கள் எல்லாம்
குழிதோண்டிப் புதைத்து
வஞ்சம் வந்து வசதியாய்
குடியேறிப்போச்சு!
-உமர் அலி முகம்மதிஸ்மாயில்
முகநூல்
By : Unknownபாடம் படிக்க வேண்டிய
மாணவன் புத்தகம்
திறப்பதை காட்டிலும்...
அவனது கைபேசியில்,
கணனியில் முகபுத்தக
கணக்கக்கினை தவறாது
திறந்து விடுகிறான்...
சிலேடு, புத்தகம் என
தூக்காத கைகளும்
கைபேசி வழியே
முகப்புத்தகம் சுமந்ததாய்
செல்கிறது...
நட்பு
கண்டு வியந்த
காட்சியையும்,
சிரித்து மகிழ்ந்த
நகைச்சுவையும்...
உள்ளம் உணர்ந்த
எண்ணங்களையும்,
உணர்ச்சிகளையும்,
அனுபவங்களையும்,
கருத்துக்களையும்,
ஆக்கங்களையும்,
இங்கே சித்திரமாய்
வரைகிறார்கள்...
பகிருகிறார்கள்...
நண்பர்கள் அவர்களது
சுவற்றிலே...
முகநூலில் முகம்
புதைத்து கிடக்கிறது.
நட்பு வட்டாரங்கள்...
நண்பர்களின் கூட்டம்,
பட்டியல் கூட நீண்டு
கொண்டுதான் செல்கிறது...
காதல்
சில போலிக்
கணக்குகள்
சில தவறான
பயன்பாடுகள்
அப்பாவிகளின் உயிரையும்
காவு கொள்கிறது...
முகம் காணாத நட்பு
கொஞ்ச நாட்களில்
முகநூல் காதலாக
மலர்கிறது...
முகப்புத்தக
அரட்டையில்
அடுத்ததாக நீ...
என்ன சொல்வாய்
என்ன கேட்பாய்
என்ற அரட்டை
எதிர்பார்ப்புகள்...
சில காரணங்களினால்
ஏற்படும்,
தோல்விகள்...
பிரிவுகள்...
வலிகள்...
எஞ்சி இருப்பது
கடவுச்சொல்லாக
பயன்படுத்திய
அவ(ன்)ள் உடைய
பெயர் மாத்திரமே...
இங்கே
"திணை விதைத்தவன்
திணை அறுப்பான்,
விணை விதைத்தவன்
விணை அறுப்பான்"
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
நடப்புக்கவிதை,
மனைவி
By : Unknownபுத்தம் புதிதாய்
பூத்த வாழ்க்கைப்
பயணத்தின் புதிய
உறவு -
மனைவி.....!
தாய் அன்பை
திரும்ப தரும்
தன்னிகரில்லா
தாரம் -
மனைவி.....!
உன் கரம் பிடித்த
நாள் முதலாய்
என் கை கோர்த்து
நடந்த பயணம் -
மனைவி.....!
நிஜத்தை உணரவைக்க
நிழலாயும் கூடவே
என்னுயிராகவும்
வந்தவள் -
மனைவி.....!
தோளோடு
தோள் சாய்க்க
தோழனைப் போல்
தோள் கொடுப்பவள் -
மனைவி.....!
பிறந்த மனைப்
பாசத்தினை துறந்து
புகுந்த மனையில்
எனக்காக முகம்
மகிழ்பவள் -
மனைவி.....!
பார்வை மொழிபேசி
என் தேவைகளை
உணர்ந்து கொண்டு
நிறைவற்றுபவள் -
மனைவி.....!
இல்லறத்தினை
நல்லறமாய் மாற்றி
இன்புற செய்யும்
இன்பம் -
மனைவி.....!
அள்ள அள்ள
குறைவில்லாத அன்பை
ஒளியாக அள்ளிதரும்
நிலவு -
மனைவி.....!
பாசதினை மட்டுமே
நிறைத்து சீதனமாய்
கொண்டு வந்த
அட்சய பாத்திரம் -
மனைவி.....!
வாழ்வில் வசந்தம்
வீசுகின்ற தென்றலாய்
வாசல் தேடி வந்த
சொந்தம் -
மனைவி.....!
வேலையில் இரவில்
தாமதமாக வந்தாலும்
உண்ணாமல், உறங்காமல்
காத்திருப்பவள் -
மனைவி.....!
வெளியில் சென்றாலும்
ஓயாத அழைப்புகளால்
என் நலன் பேனும்
அக்கறை கொண்டவள் -
மனைவி.....!
வாழ்க்கையில் இடர்பாடுகளை
சந்திக்கின்ற வேலைகளில்
தலை கோதி தட்டி
கொடுப்பவளும் -
மனைவி.....!
என்னை தகப்பனாக்கி
என் சந்ததிகளை
வளர்க்க நீர்
ஊற்றாய் இருப்பவள் -
மனைவி.....!
உறவுகள் பல கடந்தும்
மனைவியெனும் உயிரிலும்
மேலான உறவை அளிக்க
இருக்கும்
"இறைவனுக்கே நன்றிகள்"
- முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
கடவுச்சீட்டு
By : Unknownஎதிர்கால தூக்கங்களையும்,
சந்தோசங்களை, தொலைத்து
உறவுகளின் சுமை களைய
கடவுச்சீட்டும் பெற்றேன்...
தங்கையின் திருமணமும், தந்தை
கடனும், பொருளாதாரமுமே
என்னை அயல் தேசத்துக்கு
அனுப்பி வைத்தது...
ஏதோ தைரியத்தில் கடல்
தாண்டியும் வந்தேன்
கண்கள் நிறைய வாழ்க்கை
கனவுகளை சுமந்தபடி...
என்னுடன் படித்த பாடசாலை
நண்பர்கள், உறவுகள்
அனைத்தையும் ஒரு விமான
பயணத்திலே இழந்தேன்...
தாயின் அழைப்புகள், ஸ்பரிசங்களில்
எழுந்த நாட்கள் தொலைந்து
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் தொடங்கிவிட்டது...
இதயம் தாண்டி பழகிய உறவுகள்,
நண்பர்களின் நினைவுகள் எல்லாம்
ஒரு கடலை தாண்டிய கண்ணீரிலே
கரைந்து மறைந்து விடுகிறது...
விடுமுறை தினங்களில் வீதியோரம்
விளையாடி மகிழ்ந்த நினைவையும்
நண்பர்களையும் நினைக்கும் போதே
கண்ணீர் விழிகளை நனைக்கின்றது...
நெருங்கிய உறவினதும், நண்பரினதும்
திருமணத்துக்கான அழைப்பிதலுக்காக
ஒரே ஒரு தொலைபேசி ஊடான
வாழ்த்துடனே முடிவடைகிறது உறவு...
தொலைபேசி அழைப்புகளிலும்
கடிதங்களிலும் வருகின்ற
உறவினதும், நண்பனினதும்
மரண செய்திகளுக்கு...
கண்ணீர் துளிகள் மட்டுமே
ஆறுதல் தருகின்றது...
எவ்வளவு தான் சம்பாதித்தும்
நாங்கள் அயல் தேசத்து ஏழைகளே...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
கவிதை
By : Unknownநாலுவரி கவிதை
எழுத முனைந்து
நான் பட்ட துயரம்
என்ன சொல்ல...
என் பேனாவும் காகிதத்தை
கொண்று குவித்து
குப்பைத் தொட்டியிலே
வீசிக் கொண்டிருந்தது...
என்று கவிதை வயலில்
இனைந்தேனோ அன்றே...
பேனாவும் காகிதத்தை
முத்தமிட ஆரம்பித்தது...
என் கவிதை வயலும்
துளிர்க்க ஆரம்பித்தது...
என்னையும் கவிதை எழுத
தூண்டி கவிஞனாக்கிய
கவிதை வயலுக்கே
நன்றிகள் பல...
Tag :
அஸ்ரப் ஹான்,
நடப்புக்கவிதை,
ஐயறிவும் ஆறறிவும்
By : Unknownஉயர்திணைக் உண்டான
மறியாதை இன்று
அஃறிணைக்கு
அவ் அஃறிணைக்கு கிடைப்பதில்
பூஜ்ஜியம் கூட இல்லை
இன்று உயர்திணைக்கு...
ஆறறிவு கொண்ட மனிதன்
ஐந்தறிவுக்கு மாறியாதாலே
ஐந்தறிவு கொண்டதெல்லாம்
ஆறறிவின் இடத்திலே...
பகுத்தறிவை இறைவன் கொடுத்தும்
என்ன தான் பயன்
பகுத்தறியவே தெரியாத
பா(வி)வையானான்...
தன் கௌரவத்துக்கும்,
ஆடம் பரத்துக்குமான
ஆசையிலே...
ஆறறிவு மங்கி ஐயறிவாக
குறைந்து இடமும்
மாறிவிட்டது...
மனிதன் உறங்கும்
மெத்தையில் விலங்கு...
தெரு வீதியோரமா
விலங்கு போல மனிதம்...
கண் கொண்டு
காண முடியாத அவலம்...
வாழ்வினை அர்த்தம்
உள்ளதாய் வாழ்க
தொரியாமல்...
ஐயறிவினை துணையாக
கொண்டு அர்த்தமற்றவனாய்
சிலர் வாழ்வு...
"கலாசாரத்தின் சீர் கேடு
கருணை அற்றுப் போனது"
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
வாழ்கை பாதை
By : Unknownஉயர்வு தாழ்வு
கொண்ட மலைப்
பிரதேசம்...
ஏற்றமும், இறக்கமும்,
வலைவும், சுற்றுமே
பாதைகளாக இங்கு...
பயந்து கொண்டால்
பயணம் எவ்வாறு
நிறைவு பெறும்...
நம் வாழ்க்கையும்
மேடு பள்ளமும்
நிறைந்தவையே...
இன்பமும், துன்பமும்
சுழற்சியாய் என்றும்
உன்னுடனே சுழலும்...
துன்பத்தில் நீயும்
துவன்டு மனமும்
உடைந்து...
இப் பாதையிலே
நீயும் வழுக்கி
விழுந்தால்...
தளர்ந்து விடாதே
உன் பாதையாகவே
அதனை மாற்று...
முயன்றால் எதனையும்
சாதிக்கலாம், வெற்றியும்
பெறலாம்...
விழுந்த இடத்திலே
அடங்கி சோர்ந்து
கிடந்தால்...
உன் வாழ்க்கைப்
பயணம் எப்படி
முழுமை பெறும்...
முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
FEBRUARY 18, 2014
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
இரவு விளக்குகள்
By : Unknownவிடிகாலை நேரம் உறக்கம்
கலைந்து எழுந்து கொண்டேன்
என் அறையில் ஒரேயொரு
இரவு விளக்கு மட்டும் தனியே
ஒளிர்ந்து கொண்டிருந்தது...
நம் உறக்கத்தை உற்றுப்பார்த்து
கொண்டே இருக்கின்றன இந்த
இரவு விளக்குகள் என்ற என்னத்தில்
என் மனதும் லயித்து இருந்தது...
இந்த இராப் பொழுதிலே எத்தனை
ஆயிரமாயிரம் விளக்குகள் விழித்து
கொண்டிருக்குமோ...
நம் இரவு உறக்கத்தை
உலவு பார்க்க...
இரவு விளக்குகள் நம் உறக்கத்தின்
துணைவன் போலும், இவைகள்
தமக்கு தாமே முகத்திரை இட்டு
தன் ஒளியை மறைத்துக் கொள்கிறது...
இரவு விளக்குகள் நமது
காதுகளுக்கு கேட்காத
எதையோ முனுமுனுக்கின்றன
ஒரு வேலை தமக்கு தானே
எதை எதையோ பேசிக்
கொள்கின்றன போலும்...
இரவு விளக்குகளின் வெளிச்சமோ
சிறுமியின் பிஞ்சு விரல்களை போல
எத்தனை மிருது, எத்தனை ஈர்ப்பு...
இரவை கடந்து செல்ல உறக்கம்
என்ற ஒற்றைப் படகே...!
முடிவில்லாமல் யாவர் அறைகளிலும்
மிதந்து நீந்தியபடியே...!
இரவின் பேராற்றில் செல்லும்
உறக்கம் என்னும் இந்த படகு
சலனம் இல்லாது நீந்துகிறது
இரவு விளக்குகளின் துடுப்புகளால்...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
ஒட்டுண்ணி
By : Unknownஅழையாத விருந்தாளியாக
என்னிடமே வந்தாய்
அனுதியின்றியே என்
கிளையிலேஅடைக்களம்
புகுந்து கொண்டாய்
அழையாமல் வந்தாலும்
உன்னையும் அன்போடு
ஆதரித்து என்னுடனே
அரவனைத்து கொண்டேன்
என்னிடமிருந்தே உணவும்
நீரும் திருடி கொண்டாய்
நன்றி கூட இல்லாமல்
என்னையே கொஞ்சம்
கொஞ்சமாய் வாழ்ந்து
கொண்டே அழிக்கவும்
தொடங்கிவிட்டாய்
எத்தனை எத்தனையோ
காலநிலை சீற்றத்தாலும்
ஆணிவேர் ஊன்றி அசையாமல்
நின்ற என்னை அணு அணுவாய்
அழிக்க தொடங்கிவிட்டாயே
என்னுடனே உயிராய்
உறவாடி வாழ்ந்த நீயும்
இன்று அந்த உயிரயே
பறித்து கொண்டிருக்கிறாயே
உன் குணம் எனக்கு
அன்றே தெரிந்து
இருந்தால், அக்கணமே
உன்னையும், உறவையும்
அறுத்து விட்டிருப்பேன்
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
பௌர்ணமி நிலவு
By : Unknownஓடி ஓடி வேலை செய்ததில்
கலைத்துப் போன மேகம்
கலைந்து போகுது...
வயது முதிர்ந்து போன இலை
கூட கிளையை விட்டு
உதிர்ந்து போகுது...
ஆசையாய் நான் கண்டு ரசித்த
வானவில் கூட சாயம் இழந்து
தொலைந்து போகுது...
மெதுவாக ஒழிந்து கொண்டு
ஓய்வாக தூங்கவே சூரியனும்
மறைந்து போகுது...
எதிரி போலே சொல்லிக் கொள்ளாமல்
பகல் கூட பூமியை விட்டு
விலகி போகுது...
அழையாத விருந்தாளியாக
மெல்லிய இருளுடனே இரவும்
நெருங்க போகுது...
நட்சத்திரங்கள் கூட தங்க
மீன்களாய் வானை அலங்கரிக்க
சிதற போகுது...
வெட்டிப் போட்ட நகமாய்
கிடந்த நிலவு கூட இன்று
பௌர்ணமியாக போகுது...
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
ஏனையவை,
விதவை
By : Unknownபின்னரும் வாழத்
துடிக்கின்ற ஒரு இளம்
வண்ணத்துப்பூச்சி
"இவள் "
தொட்டனைத்து தாழி
கட்டியவனும் பட்டுப்
போனதாலோ...
வர்ணங்கள் எல்லாம்
கெட்டுப்போன வெளிர்
வானவில்...
"இவள் "
காமக் கண் கொண்டு
இச்சை ஊளையிடும்
நரிகளுக்கு...
உஷ்னமேற்றி விழிகொண்டு
உலை வைத்தெரிக்கின்ற
உன்னத பிறவி
"இவள் "
சுற்றத்தார் பாடுகின்ற
வசைகளை இனிமையான
இசையென ரசிக்க
கற்றுக் கொண்ட
ரசிகை...
"இவள் "
விதவை என்னும்
பட்டத்தின் நாணேற்றி
வாழ்க்கை என்ற
இருண்ட வானிலே
பறக்கவிட துடிக்கும்
அதிசய சிறுமி
"இவள் "
உளி தொலைந்த
பின்னும் தன்னை விட்டு
தொலைந்தவன் உருவை
தினமும் கண்ணீரில்
கரையும் உயிரில்
சிற்பமாய் வடிக்கின்ற
உன்னத சிற்பி
"இவள் "
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
ஒரு நாள் மழை
By : Unknownஇலேசாகவே தூர
ஆரம்பித்தது மழை...
கீழ்வானிலே அழகாய்
ஒரு மின்னல் கீற்று...
தொலை தூரத்தில் எங்கோ
முழங்கிய இடியோசை
மழை விட்டும் கூட தூவானம்
இன்னும் விடவில்லை...
எங்கிருந்தோ சற்று இதமாக
வீசிய தென்றல் வழியே...
கண்ணாடி இடுக்கினூடே
உள் நுழைந்த சாரல்...
முகங்களையும், காதூகளையும்
வருடிச்சென்றது மட்டுமல்லாமல்
எல்லா இடங்களிலும் ஈரங்களை
கொண்டு சேர்த்தது...
சாரல் எங்கும் பரவத் தொடங்க
மெதுவாக ஜன்னல்களை மூடினேன்
கண்ணாடியில் இன்னும் பெய்து
கொண்டுதான் இருக்கிறது மழை...
கையில் ஏந்திய தேனீர் கப்புடன்
ஜன்னல் அருகே அமர்ந்து...
என் முடிவற்ற தனிமை வழியே
ரசித்துக் கொண்டிருந்தேன் மழையை...
பச்சை இலைகள் மழைத்துளிகளால்
ஈரமும், குளிருமாய்
தலை துவட்டாமலே
மரங்கள்...
செடிகள்...
கொடிகள்...
மழை நின்ற பின்னும்
இந்த இதமான தனிமை
இன்னும் சற்று நேரம்
நீள வேண்டுமென என்
உள்ளமும் ஏங்கியது...
"அந்த ஒரு நாள் மழை"
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
மழையில் ஒரு நாள்
By : Unknownஒரு நாள் பெய்த
பெருமழை...
நனைந்து நின்ற உன்னை
குடை கொண்டு மூடவே
என்னருகில் அழைத்தேன்...
குடையை பறித்து எறிந்து
என்னையும் இழுத்துவிட்டாய்
மழையில் நனைய...
உன் முகத்திலும் மூக்கு நுனியிலும்
ரோஜா இதழில் பூத்த பனி போல
மழை நீர் தங்கி நிற்க...
பூத்து விரிந்த மலராக
பளிச்சிட்ட உன் முகத்தை
ஒவ்வொரு மழையிலும்
என்னால் மறக்க முடிவதில்லை...
உன்னோடு இனைந்து நனைந்த
அம் மழை போல் இதுவரை
எம் மழையும் பெய்ததில்லை
என் மனதுக்குள்...
எங்கேனும் ஓரிடத்தில்
மழையை ரசிக்கும் போது
அன்று பெய்த மழையின்
ஈரச் சாரலாய் துளிகள்...
என்னுள் இன்னும்
சிலிர்த்து தெரிக்கின்றன...
கடந்த நினைவுகளில் சுரந்த
மேகங்களை கலைத்து
சொரித்தது போல...
"ஒரு நாள் பெய்த மழை"
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
காதல் கவிதை,
மனித வாழ்க்கை
By : Unknownஉயிர் ஒன்று பிறக்கும் நொடியிலே
துடிக்க தொடங்குகிறது மரண
கடிகாரம் பூஜ்ஜியத்திலிருந்து...
மனிதன் வாழ்க்கையோ
இரண்டு பக்கங்களே
இதனிடையே எத்தனை
எத்தனை மாற்றங்கள்...
பிறந்தோம்,
வளர்ந்தோம்,
உழைத்தோம்,
வாழ்ந்தோம்,
இறந்தோம்,
மனித வாழ்க்கை ஒரு விசித்திர
பயணமே விழி கண்ட வழியில்
நற்குணம் என்பது சக்கரம்
ஒழுக்கம் என்பது அச்சாணி
கழண்டால் உருளுவாய்
மண்மேலே கவணமாய்
காத்திடு மனிதா...
நேற்றைய கடந்த கால
நினைவுகளிலும்
நாளை நடக்கும்
எதிர்பார்ப்புகளிலும்
மனிதன் வீணான
கற்பணைகளிலே
நேரங்களையெல்லாம்
செலவிட்டு...
இன்றைய நிகழ்காலங்களை
இழந்து விடுகின்றான்...
வயோதிபம் அடைந்தால் தான்
இளமைக் காலகட்டங்கள்
தவறுகளே என
தோன்றும்...
பேசும் போதெல்லாம்
அறிவுரைகள் முளைக்கும்
தத்துவங்கள் தெரிக்கும்...
இறைவன் எழுதிய
மனிதனின் வாழ்க்கைப்
புத்தகத்தின்...
"முன்னுரையாய் பிறப்பும்
முடிவுரையாய் இறப்பும்"
"அனைத்து உயிர்க்கும்"
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
யாழ் / யாழ்ப்பாணம்
By : Unknownமஞ்சள் வெயில் பூத்த வானம்
பனை மரங்களின் தாலாட்டு
பச்சை கிளிகளின் சங்கீதம்
யாழ் தொட்டால் எம்
காதுகளுக்கு எட்டிவிடும்
மனதோடும் ஒட்டிக்கொள்ளும்
நற்பண்பும் அனைவரையும்
அரவணைக்கும் நல்லுணர்வும்
யாழ் மக்களின் உடைமைகள்
சோலைக் குயில்களின் சங்கீதமும்
காலை எழுந்ததும் மனதுக்கு
சுகம் சேர்க்கும்...
வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்
நெஞ்சோடு ஒட்டிய கவிதைகள்
காதுகளில் இனிமையாய்
ஒலிக்கும் செந்தமிழும்...
வானுயர எட்டி தலை நிமிர்ந்து
நிற்கும் பனைமரங்களும்
மனதுக்குள் மலர்வனங்கள்...
என்றுமே இயற்க்கை நிறைந்த
"யாழ்"
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
நடப்புக்கவிதை,
தபால்
By : Unknownஉள்ளாசமாய் சேதிகளை
சுமந்து வந்தாய்...
உள்ளங்களோ வார்த்தை தேடி
உயிர் கொண்டு தீட்டிய
காவியமாய்...
ஒவ்வொரு முறையும்
உயிர்ப்பிக்கும் உன்னதம்
தாயே...
கடிதங்கள் இனிமையானது
உண்மையானது இதயங்களை
வரிகளுக்குள் சுமப்பதால்...
தபாலில் வரும் சந்தோசங்களை
இன்றைய மின்னஞ்சலும், அரட்டையும்
தந்துவிடாது...
உரிமையுடன் பாரமிட்டோம்
நீ சுமப்பதால் தான்
கடிதங்களை...
சில நேரம் உறவுகளுக்காய்
ஓலையும் அனுப்பி
வைத்தோம்...
உயிரற்று நடமாடும் கடிதங்களை
பிரசவிக்கும் தபால் அன்னையே...
உனக்காய் வாயில் கதவோரம்
எதிர்பார்த்துக் காத்திருந்த
நாட்கள் எத்தனையோ...
இன்று வந்துவிடும் என்ற நம்பிக்கை
ஒவ்வொரு முறை உன்னைக்
கடக்கும் போதும்...
சமூதாய சிற்பியின்
சிலையான சிகப்பு
காவியம் நீ...
முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
ஏனையவை,
மீனவன்
By : Unknownஒரு வேலை உணவுக்காக
ஓராயிரம் தடவைகள்
செத்துச் செத்து பிழைக்கிறான்
படகிலேரிய ஒவ்வொரு மீனவனும்
ஆழமான கடலுக்குள்ள பயணம்
போகின்றோம் நாங்க
வாழவும், வறுமையைப் போக்க
வழீயின்றி வலையை வீசுகிறோம்
புயலடிக்கும் நேரங்களிலும் உள்ளே
பொழைப்புக்காய் போகிறோம்
ஒரு சான் வயிற்றுக்காய்
அடகு வைக்கிறோம் வாழ்க்கையை
நீண்ட நீலக்கடல் சென்றவனும்
கரை திரும்பாமல் போனால்
காத்துக்கிடக்கிறது வீட்டிலே
கருப்பு கண்ணீர் அஞ்சலி...
அலைகளோடு சேர்ந்து
ஆட்டம் போடுவது
செலுத்தும் படகு மட்டுமல்ல
இவனது வாழ்க்கையும் தான்
உணவுக்காய் மீன் தேடப்
போகின்ற இவனும்
ஒரு நாள் இறையாகிப் போகிறான்
அந்த மீனுக்கே...
கடல் நீர் எல்லாம் உப்பால்
செறிந்ததாலோ என்னவோ
இவனின் கண்ணீரின் விலை கடல்
அன்னைக்கு தெரியாமலே போய்விட்டது.
- முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்
இளநீர் விற்கும் மங்கை
By : Unknownஅடி சற்றுப் பெருத்தும்
இடை கொஞ்சம் சிருத்தும்
ஈன்ற குலை பெருத்த
தென்னையாய் அவளும்.....!
தாழ்ந்து தவறி விடாமல்
தன்/மானம் காத்திடவும்
வாழ்க்கையை தொடர
குவித்த இளநீர் குலையுடன்.....!
தென்னை விரித்த பாலை போல்
புன்னகையுடன் இவளும்
பாதை குறுக்கிட்டு அழைக்கிறாள்
பருக இளநீரும்.....!
பருத்த பருவ குலையை
பார்க்கும் போதே
தாகமும் எடுக்கிறது
தானாகவே......!
தேகத்தின் சூடும் அடங்கி
இறங்கி விடும்
இவள் விற்கும் இவ்விளநீர்
பருகும் வேலையில்.....!
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
வாழ்க்கையை தொடர
குவித்த இளநீர் குலையுடன்.....!
தென்னை விரித்த பாலை போல்
புன்னகையுடன் இவளும்
பாதை குறுக்கிட்டு அழைக்கிறாள்
பருக இளநீரும்.....!
பருத்த பருவ குலையை
பார்க்கும் போதே
தாகமும் எடுக்கிறது
தானாகவே......!
தேகத்தின் சூடும் அடங்கி
இறங்கி விடும்
இவள் விற்கும் இவ்விளநீர்
பருகும் வேலையில்.....!
-முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
முத்தம்
By : Unknownஉன் காதுகளோடுஎன்னுதடுகள்
முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்பவளே...
உன்னுதடுகளோடு
என்னுதடுகள்
ரகசியம் பேசும்
போது மட்டும்
ஏனடி முத்தம்
என்று கத்துகிறாய்...
எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள
முடியும்
என் இதயத்துக்கு
உன் மெல்லிய
முத்தத்தைத் தவிர...
உயிரும் உயிரும்
மேலேறிகூடுவிட்டுக்
கூடுபாயும் வித்தை
கற்குமிடம் தான்
நம் இரு உதடுகள்
சந்திக்குமிடமா...
-முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
காதல் கவிதை,
முத்தமிட்டுப் பார்
By : Unknownநான்கு கண்களும்
பார்வை வீசிய அம்புகள்
மோதிய வேலை...
நம் இருவரின்
துடிப்புள்ள இரு இதயமும்
இனைந்த வேலை...
என்னிரு இதழ்களை நோக்கி
உன்னிரு இதழ்களும்
நெருங்கிய வேலை...
உந்தன் மூச்சுக் காற்றுப்பட்டு
என்னுடல் உஷ்னமேரிய
அந்த வேலை...
என்னுதடுகளை நீயே பற்றி
சுவைத்துக் கொண்ட அந்த
இன்பமான வேலை...
மின்சாரம் தாக்கியதென நான்
மெய் சிலிர்த்து தள்ளாடி
நின்ற வேலை...
கண்கள் இரண்டும் சொருகி
என் மூச்சுக் காற்றுக்காய்
போராடிய வேலை...
வர்ணிக்க வார்த்தைகள் அல்ல
நீயும் முத்தமிட்டுப் பார்
உணர்ந்து கொள்வாய்...
-முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
காதல் கவிதை,
வயோதிபப் புத்தகம்
By : Unknownபேனா மை கொண்டு
எழுதப்படாத உணர்வுகள்
நிறைந்த வாழ்க்கை புத்தகம்
அடங்கியவை அனைத்துமே
உண்மையும், அனுபவமுமே
வரிகளாக கொண்டு
தோல் விழுந்த சுருக்கமும்
ஒட்டிய வயிருமே
உணர்த்தி விடுகின்றது
முதுமையை! வறுமையை!
அன்று நீ தத்தி தத்தி துளிர்
நடை நடக்கையில் பிள்ளையாய்
உன்னை தவறி விழ
விடாமல் தாங்கியவள்
இன்று தானே தள்ளாடிக் கொண்டு
தனிமையில் வதைபடுகிறாள்
நீ பிள்ளையாக இருந்தும்,
இல்லாது...
அழகாய் துளிர்ந்து
வாழ்ந்து கெட்டுதுதிர்ந்த
வயோதிப சருகாக "இவள்"
உட்கார்ந்து கொஞ்சம்
ஓய்வெடுக்க விடாமல்
வீசித்தான் கலைக்கிறது
அகங்காரம் தலைக்கேரிய
சுழன்று வரும் பசியும்,
வருமையும்,,,
இப்படியே நீண்டு கொண்டுதான்
சென்று கொண்டிருக்கின்றது
நீண்ட தொடர்கதையாக இப்
புத்தகம் மன்னறையை நோக்கி
மனித குலமெனும் நூலகத்தில்
மறைந்து போகும் நிலையில்
அனையப் போகும் மெழுகுதிரி போல்
முதுமையடைந்த இப் புத்தகம்
-முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்
ஓய்வெடுக்க விடாமல்
வீசித்தான் கலைக்கிறது
அகங்காரம் தலைக்கேரிய
சுழன்று வரும் பசியும்,
வருமையும்,,,
இப்படியே நீண்டு கொண்டுதான்
சென்று கொண்டிருக்கின்றது
நீண்ட தொடர்கதையாக இப்
புத்தகம் மன்னறையை நோக்கி
மனித குலமெனும் நூலகத்தில்
மறைந்து போகும் நிலையில்
அனையப் போகும் மெழுகுதிரி போல்
முதுமையடைந்த இப் புத்தகம்
-முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
வயிற்றுப் பசி
By : Unknownஏழைகளுக்கு
வயிற்றுப் பசி,
பணக்காரர்களுக்கு
அந்தஸ்து பசி..
நடுத்தரத்திற்கு
எல்லாமே பசி..
உணவிருந்தும் பட்டினி
கிடப்போர் சிலர்
உணவின்றி பட்டினி
கிடப்போர் பலர்
வயிற்றுப் பசி
ஏழைகளுக்கு கூட வருவது
வருத்தம் தருகிறது..!
ஆனால்
ஏழ்மையும்
பணச்செழுமையும்
வருந்தி வெட்கி,
தலை தொங்குகிறது..!
- முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
வாழ்க்கை கவிதை,
செந்தாமரை
By : Unknown
சேற்றில் முளையுன்ட
செந்தாமரை...அழகாய் உதிர்த்த
மொட்டுடன்...
அசைந்து ஆடிக்கொண்டே
அந்த குளக்கரையில்...
சூரிய உதயமும்
தோன்றவே...
தான் கொண்டிருந்த
துயில் கலைக்க...
மெதுவாக விரித்தது
தன்னிதழ்களை...
மலர்ந்தது தாமரை
மலர் மட்டுமல்ல...
காட்சிகள் நிறைந்த
காலைப் பொழுதும் தான்...
அவ்வழியே கோயில்கள்
நோக்கிச் சென்றவரும்
கூடவே சென்ற பருவமங்கையும்
அழகில் மூழ்கினர்..
சில மங்கைகள்
பறித்தும் கொண்டனர்...
கூந்தல் சூடிக்கொள்வதற்கு அல்ல
கூடையில் ஏந்திக் கொள்வதற்கு...
- முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
Tag :
அஸ்ரப் ஹான்,
ஏனையவை,