அதிகம் வாசித்தவை

Archive for March 2014

முதிர் கன்னி

By : Unknown













உற்றார் உறவினர் சுற்றமும்
நட்பும் எல்லாமே சூனியமே

முப்பது தாண்டுகிறது
நாப்பதை எதிர் நோக்கி

என்னை நோக்கி தான்
எம் மகனும் வரவில்லை

தீ பட்டு எறிவது போல்
மனப் பூ பற்றி எரிகிறது

தேனீ ஓன்று தீண்டாமல்
தேயும் ஒரு மலரிங்கு

சுடர் விடுகின்ற என் வாழ்வும்
சூனியமாய் ஆன தேனோ

படர் கோடிக்கும் கொப்பில்லை
தொடர்வதிலும் ஏதும் தவறில்லை

வல்லவன் எவனும் வரவில்லை
வாழ்வேதும் தரவுமில்லை

நாளை நாளை என்றே
நகர்கிறது என் வாழ்வும்


                  -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

இறப்பு

By : Unknown









உடலை விட்டு
உயிர் மூச்சு
ஓடினால்

உலகம் காணும்
இறப்பு

என்னை விட்டு
உந்தன் மூச்சு
ஓடினால்

நான் காணும்
எந்தன் இறப்பு


                 -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

சிறுவயது நினைவுகள்

By : Unknown













கை, கால்களில் எல்லாம்
புதிதாய் இறக்கைகள் முளைத்து
சந்தோசத்தின் உச்சி வானம் வரை
பறந்து திரிந்த காலம் அவை...

எப்படி தான் மறக்க முடியும்
அந்த பொன்னான நினைவுகளை
வீதியோரமாய் விடுமுறை நாள்
தேடியே விளையாடி மகிழ்ந்ததை

இரண்டாய் குழு பிரித்து ஆடிய
கிட்டிப்புள் - எத்துக்கம்பு கொண்டு
கிட்டிப்புள் தூக்கி வீசி ஆடியதை

தென்னை மட்டை மாட்டு
வண்டிப் பயனங்கள்
பனைமர நுங்குகளில் இணைத்த
தள்ளு வண்டிப் பயணங்கள்

மரக்கட்டையில் செய்த பம்பரமும்,
காலை, மாலையென தெருக்களில்,
கூடி கோலி அடித்து மகிழ்ந்ததை...

கழட்டிப் போட்ட சைக்கிள்
டயரும், வலயமும் எங்கள்
கால்கள் சென்ற இடங்கள்
எல்லாமே கூடவே பயணிக்கும்

பாடசாலை விடுமுறையில்
சாலையோரம் ஆடி மகிழ்ந்த
உள்ளூர் உலகிண்ண கிரிக்கட்
சுற்றுப் போட்டிகள்

மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த
அந்த காலம் சுருங்கி இன்றே
ஐபாட், டாப்லட் வடிவில் அனைவர்
உள்ளங்கைகளிலும் தவழ்கிறது

அத்தனை சந்தோசங்கள்களும் இன்று
அடியோடு இழந்து விட்டோம்
சந்தோசங்கள் மட்டுமல்ல மாறாக
எங்களது மன நிலையம் தான்

பசுமைகள் எல்லாம் மறைந்து
பாலைவனமாய் மாறுது
அன்பில்லாத நெஞ்சங்களாக
வஞ்சங்கள் நிறைதுது...


                       -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

என் விழி சொன்ன காதல்

By : Unknown













பச்சை கம்பளங்கள்
விரித்த புல் வெளியும்
வீயடிக்கும் காற்றிலாடும்
வெண்ணிற திரை நீர்வீழ்ச்சியும்

கன்னம் சிவந்த வெட்கத்தில்
அந்தி நேர வானம்
கருங்கூந்தல் மேனியாய்
சாயும் பொழுதுகள்

காரிருள் மேகமாய் வானம்
நீண்ட மரங்கள் - அதிலே
சிணுங்கள்கலோடு மெல்லமாய்
சிறகு தட்டும் காதல் பறவைகள்

இயற்கை அன்னை அள்ளிதெளித்த
இக்காட்சிகளை ரசித்தபடியே
இதய அறைகளில் இருந்து இதமான
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

கண் பார்வை தொடும் தூரம்
வரை தனிமையே நீண்ட
ஒற்றையடிப் பாதையில் அவளோடு
நானும் பொடி நடை பழகையில்

என் தோள்கள் அவள் தோள்கலோடு
சிநேகம் கொள்ள துடிக்கையில்
எதிர்பாராமலே என் விரல்களோடு
அவள் விரல்களும் பின்னிப் பிணைய

இருவரின் இதயங்களும் அமைதியாய்
இதமான மௌன கீதங்கள் இயற்ற
இதழ்கள் மட்டும் கொண்ட காதலை
சொல்ல முனைந்து கொண்டே இருந்தது

இதழ்கள் முனைந்து தோற்றத்தை
உணர்ந்து எனது விழிகளும்
காதல் உணர்வுகளை எல்லாம்
தூதாய் அனுப்பியது அவள் விழியிடம்

புவிஈர்ப்பு சக்தியை அவளின்
விழிஈர்ப்பு சக்தியும் என்னில்
மோதியே என்னிரு விழிகளையும்
ஆட்கொண்டது சிறிது நேரம்

என் விழியில் வீழ்ந்தாலோ
அவளும் காதல் கொண்டாலோ
ஒரு சிறு புன்னகையாலே
என்னையும் காதலில் வீழ்த்திட்டால்

"என் விழி சொன்னா காதலில்"


                         -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

ம(னித)துக்கடை

By : Unknown













ஏட்டில் எழுதின கல்வியும்
எட்டாக் கனியாய் இருக்க
எட்டு வயதுக் குழந்தையும்
எட்டி டாஸ்மார்க் பாக்குது

பள்ளி செல்லும்
வழி தவறியதால்
போதை பயிலும்
இடமாக மதுக்கடை

வருங்கால தூண்களாய்
வர்ணித்த அப்துல் கலாமின்
கனுவுகள் வழுக்கி விழும்
இடமாய் மதுக்கடை

ரேசனில் அரிசிக்காய்
கா(ல்)மணி நேரம் கூட
நிற்க முடியவில்லை

காலையிலே
கடை திறக்கும் வரை
கால் கடுக்க நிற்கின்றான்
குடிமகன் மதுகடையில்

குடித்த போதை சுகத்தில்
குடி மகன்
உண்ண உணவில்லா சொல்லா
துயரில் உறவுகள்

தன் சாவை
தானே பணம் செலுத்தி
மனிதன் உறுதி செய்து
கொள்ளுமிடமாய் மதுக்கடை

விதவைகளின் இலவச
மகப்பேறு நடக்கும்
மருத்துவ மனையாய்
மதுக்கடைகள்

இமயம் தொட வேண்டிய
இளசுகள் சீரழிந்து
இன்று பாதாளம் வீழ
இயங்கும் கடை 

"மதுக்கடை"


             -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

நான் ரசித்த பௌர்ணமி இரவு

By : Unknown











அரும்பாக தோன்றிய மொட்டு
மெதுவாக மலர்ந்தால் போல்
படிப்படியாக வளர்ந்து இன்று
பூரண மலராக முழுமதி தோன்றுகிறது
அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக

இவ் அழகை காண மலர்ந்த
தோட்டத்து மல்லிகையாக
மின்னிடும் மின்மினியாக
வானத்து விண்மீன்கள் கொத்து
கொத்தாக பூத்திருக்க

நிலவொளியில் நிறைந்து அலைததும்பும்
பாற்கடலிலே முத்துக் குளிக்கவே
சாம்ராஜ்ய அரசிலங் குமரியாய் நிலவரசி
வலம் வருகிறாள் மெதுவாக மேகத்தினூடே
அரண்மனைக் காவலர்களாய் ஆடையணியா
விண்மீன்களின் துணை கொண்டு

மூடி இருந்த ஜன்னல் திரைவிலக்கி
மெல்ல அதனருகே கவிழ்ந்து படுத்து
கால்களிரண்டும் மேலும் கீழுமாய் நடனமாட
படிப்பதற்காய் விரித்து வைத்த புத்தகமும்
திறந்தபடியே எனை எதிர்பாத்து தவித்திருக்க

எனதிரு கண்களும் உள்ளமும் மட்டுமே
ஏனோ ஜன்னல் வழியே அழையா
விருந்தாளியா உல் நுழைந்து இருந்த
பெண்ணிலவோடு ஏதேதோ மௌன
பாசைகளில் பேசிக் கொள்கிறது...


                       - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

மண்பாண்டம்

By : Unknown













வெட்டி உடைத்து
நீர் விட்டுக் குலைத்து
உருட்டி தட்டி அச்சிலேற்றி
மண்பாண்டம் செய்கிறான்
மனிதன்.............

கடைசியில் மண்ணிடமே
மடிய போகின்றோம்
என்பதனை மறந்து.....


                    -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

மண்

By : Unknown










மண்
என்னைப் படைக்க
இறைவன் தேர்ந்தடுத்த
மூலப் பொருள்....

தாய் ஈன்ற பின்
தவழ்ந்து நான்
நடை பழகவே
மடி கொடுத்த
மற்றுமொரு தாய்

குழந்தை பசி, தாகம் தீர்க்க
தாயோ பால் சுரக்கிறாள்...
நீயோ உயிரினம்
அனைத்துக்குமாய் ஊற்றெடுத்து
நீர் சுரக்கின்றாய்...

சுரந்த நீரிலே
மரம், செடி, கொடியென
கொடுத்து அதிலே உண்ண
உணவும் அளிக்கின்றாய்...

வாழும் போது மண்ணுக்காய்
எத்தனையோ போட்டிகள்
இறந்த பின்னர் அனைத்தும்
அடங்கியே அமைதியாக
அடிமையாய் மண்ணுக்குள்...

மண்ணிலே !
பிறந்ததென்னவோ சில நொடிகளில்
தவழ்ந்து திரிந்தது சில வாரங்கள்
நடந்ததும் சில காலமே
தளிர் நடையும் சில காலமே...

புதைத்து இழுத்து மூடிய
பின்னரே இந்த மண்
தின்னப்போவது மட்டும்
பல காலங்களுக்கு...


           -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

தொற்றாத புற்று!

By : Unknown












தொடமுடியா இடத்தில்
தெரியாமல் தொடக்கி
கெடுபிடியா உடம்பில்
விரைந்து படரும்!

இரத்தத்தில் தோன்றி
வருத்தங்கள் காட்டும்
சத்தங்கள் இன்றி
நெருப்பினை மூட்டும்!

தீராத தலைவலி வாந்தியும்
வலிப்புடன் வரும்
கட்டி மூளையத்தொட்டால்!

விழுங்கிடக் கஷ்டம்
நீராகாரம் மட்டும்
வழுக்கிடும் ஒடுங்கிய
தொண்டைக் கட்டியினூடே!

பெருந்தீட்டு போகும்
தொடராய் ,நீ சோர்வாய் பலனாய்
கருப்பையில் கட்டி
நீ உணர்வாய்!

செரிமானம் குறையும்
பசிதாகம் பறந்து
ஒருபிடிச்சோற்றில்
முழு வயிறு நிறையும்
இரைப்பையில் கட்டி
இருந்திடும் போது!

எலும்பினில் கட்டி
உன்னை வைத்திடும் கட்டி
நடந்திட மாட்டாய்
நீ அடி வைத்து எட்டி!

தண்டுவடம் துவண்டு விடும்
வந்த இடம் வளைந்து விடும்!

தசையினில் தொட்டு
உன் அசைவினைக் கட்டும்!

நாக்கிலே வந்து சொல்
வாக்கினை கெடுக்கும்
ஆக்கிய சோற்றின்
சுவையினை மறைக்கும்!

சொக்கிலே வந்து உள்
தாடைக்கு பரவும்
மூக்கிலே முளைத்து
மூச்சையும் மறிக்கும்!

குரல் மாறிப்போகும்
உரல் போல ஆகும்
சுரம் ஓடித்தேயும்
குரல்வளையினில் படின்!

நுரையீரல் வந்து
இடைவிடா இருமலும்
விரைகின்ற மூச்சுடன்
குருதி சளியுடன் வரும்!

சிறுநீரில் இரத்தம்
அதன் பாதையில் கட்டி
சிறு நீர் சேர்ந்து அடிக்கடி
முடுக்குமே வந்து முட்டி!

மலச்சிக்கல் வந்து
உனைச்சிக்கலாக்கும்
மலம் நீராய் மாறி
உன் குடல்நோய் காட்டும்!

தோலிலே கட்டு
புண் மாறாததையிட்டு
தோலெல்லாம் திட்டு
தோலிலே சில பொட்டு!

ஈரலில் வந்தது
தீராமல் நின்றது
ஓரக் கண்ணின்
வெண்நிறம் மஞ்சளாய்
தோலையும் மாற்றிடும் !

பால் குடிமறந்த பிள்ளை
அவள் பால் கொடுப்பதுமில்லை
தடித்த திரவம் வடியும் சிவப்பாய்
பிள்ளை பால்குடிக்கும் இடத்தில்!

நிறை காட்டும் தராசு
உனைப்பார்த்து முறைக்கும்
உனக்கென்ன குறை
என்று வினா ஒன்று தொடுக்கும்!

களைப்பு உன்னிலே
களைகட்டும்
இளைப்பு உன்னிலே
கொடிகட்டும் !

உழைப்பு உனக்கினி
தூரமாகும்
சிரிப்பு தள்ளி நின்று
கை காட்டும்!

காய்ச்சல் அடிக்கடி
மாச்சலுக்கு நீ எடுபிடி
ஓய்ச்சல் ஒழிவின்றி
உழைத்திடும் இதயம்
இதனிலே இல்லை!

வயதெல்லை இல்லை
இது பெரும் தொல்லை
பால் எல்லை இல்லை
விதி வரை எல்லை!

நாட்பட்ட
குணங்குறி நீ அறி
பயம் அதை நீ எறி
நாடிடு மருந்து
தேடிடு விரைந்து!


                  -உமர் அலி முகம்மதிஸ்மாயில்


  • நாம் எல்லோரும் நமக்கும், ஏனையோருக்கும் புற்றுநோய் வராமல் இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம். 
  • வந்தவர்களுக்காய் அவை குணப்பட மனம் உருகி பிரார்த்திப்போம்! 
  • நாம் வாழும் சூழல், உண்ணும் உணவுகள், கதிரியக்கம், பழக்கவழக்கம் போன்ற விடயங்களில் எச்சரிக்கையாய் இருப்போம்!

தமிழ்

By : Unknown

















அருவி போலவோர்
நெளிவு சுளிவுடன்
தென்றல் போலொரு
இனிய சுகத்துடன்!

தமிழ் நதி தான்
பாய்ந்த இடமெல்லாம்
மண் நனைத்துச் சென்றது!
தனை
அள்ளிச்சுவைத்தவரின்
மனம் கொள்ளை கொண்டது !

"ல'கர ' ழ'கரத்தில்
அர்த்தம் திருத்தமாய்
ர"கர ற "கரத்தில்
ஒழுக்க தழுக்கமாய்

ஒருசொல் பலபொருள்
இடக்கரடக்கலும்
மருவலும் குழு உக்
குறியும் கொண்டதே !

சொற்களில் வேற்றுமையும்
புணர்ச்சியும்
தொகையும்
தொகை மயிலாக

நானிலத்தின் சிறப்பை
தன்னகத்தே
நல்ல சொல்வளத்தால்
கொண்ட செந்தமிழ் தமிழ்!

உயிரும் உடலும்
ஒன்றாகி பொருளைத்தருவதில்
கண்ணாகி தமிழும்
இன்னொரு கண்ணகி!

இருநூறும்
ஈர் இருபதும்
ஒராறும்
ஓர் ஆயுதமும்
கருவியாக்கி
மாநிலம் உழுது
மொழிப்போர் செய்து
மொழியினை விதைத்தது!

பாட்டும் தொகையும்
ஏட்டிலே கொடுத்தது
பதினென் கணக்குகள்
பாட்டிலே தந்தது

அகத்தியம் அகத்திலே
கொண்டு ,தொல்
காப்பியம் அடிப்படை இலக்கணம்
கண்டது இன்பத்தமிழ்!

ஔவையர் சுருக்கிய
ஔடதம்
வளைகளும் பதிகளும்
கொண்ட காப்பியம்!

குமரியும் வேங்கடமும்
முன்னர் எல்லை
விரியும் பாரிலே இன்று
தெரியுதில்லை
இன்பத்தமிழின் எல்லை !

சங்கம் செய்தது
சந்தம் செய்தது
சங்கீதம் செய்தது
அந்தம் இல்லாதது
எங்கள் தமிழ் !

காப்பியங்கள் கனிவுடன்
ஒப்பித்து
இலக்கியங்கள் இங்கிதமாய்
கற்பித்து

நெறி சொல்லி அருங்
குறிசொல்லிய செந்தமிழ்!

உரைநடை விரிவுடன்
இலகுவாய் கூறி
சிறுவர் இலக்கியமும்
செய்யுளில் கூறிய நற்றமிழ் !

பாரதி தமிழ் அடிதொழுதான்
அண்ணன்
கண்ணதாசன்
கவியால் தொழுதான் !

காப்பியர் கண்டிப்பு
வள்ளுவர் தண்டிப்பு
சேக்கிழார் சொல்லுப்பூ
சாத்தனார் முத்தாய்ப்பூ !

பூக்களை சொல்லிலே
கோர்த்த தமிழ் மாலை
பூக்களால் மணத்திடும்
நறுஞ்சோலை !

தமிழொரு தொடர்கதை
அழகான புதுக்கவிதை
மரபினை தழுவிய காவியம்
உயிரிசை தலும்பிடும் ஓவியம்!


                       -உமர் அலி முகம்மதிஸ்மாயில் 

விமானப் பயணம்

By : Unknown











சிட்டுக்குருவி போல
சின்னதாய் விமானம்
கண்களுக்கு தோன்றிய
காலம் அவை...

சைக்கிள் டயர் ஓட்டி கொண்டே
விமானம் விரட்டிய அந்த நாட்களில்
ஏனோ அதில் பயணிக்கும்
ஆசை இருந்ததே இல்லை...

மேகங்களில் எல்லாம் ரோடு
போட்டது போன்றே புகைக்
கோடுகள் அந்தி வானம் வரை
சென்று மறைந்த காலம் அது...

இதோ உலோகம் பறவையான
அற்புத விந்தை
காற்றில் மோதி மேகம்
கிழிக்கின்ற பயணம்...

இந்த உலோக பறவையின்
பயணத்தின் ஜன்னல் வழியே
எத்தனை அழகு அதிசயங்கள்...

கை தொட துடிக்கும்
மேகக் கூட்டங்கள்
கண் பார்வை தொடும் இடம்
எல்லாம் பூமியின் பசுமைகள்...

கரை தொட அடிவானம்
கடக்கும் சூரியனும்
கதிரவனின் ஒளி ஓவியமாய்
கடல் நீரும்...

பறிதவித்துப் போன
என் மனமோ
எதையுமே ரசிக்காமல்
யோசித்து கொண்டிருக்கிறது...

கண்ணாடி கதவின் வழியே
கடைசியாக கையசைத்து
கண்ணீர் மல்க நின்ற
கவலையடைந்த உறவுகளை...


          -முஹம்மது ஆரிப் அஷ்ரஃப் ஹான்

கால்ச்சட்டை (பாதணி)

By : Unknown
















கடை கடையாய் ஏறி
கால்தேய்ஞ்சி போயி
கடைசியிலே வாங்கிவந்த
கால்ச்சட்டை நானல்லோ !

கால்நடையாய் நான் சென்று
கால்நடைபோல் மேயாத
இடமில்லை !

முள் ஏறிமிதித்து
உள்வலியைத்தாங்கும் என்னை
முதிகேறி மிதித்து
உன் வழியால் போனாயே!

கொதிக்கின்ற பாதையிலே
உன்பாதம் புண்படாமல்
கொதிதாங்கி நடந்தேனே
உனைக்காத்து நின்றேனே!

இறப்பர் கேடயம் நான்
இறந்து இறந்து மடிந்தேன்
உன் வாழ்க்கைப் போரினிலே
நாளும் மீளப் பிறந்தேன் !

மேல்சட்டை கால்சட்டை
பலவடிவில் இருந்தாலும்
கால்சட்டை நானுனக்கு
ஒரே அளவில் வேணுமடா!

நான் உனக்காக
எதிரில் வந்தவற்றில்
மதித்தவற்றை விட
மிதித்தவைகளே அதிகம் !

உழைப்பிலே உடனிருந்தேன்
ஓய்விலே தூரவைத்தாய்அன்று
மடையனுக்கு புரியவில்லை
மனிதன் உந்தன் மனநிலை!

பாவம் செய்ய
கூட்டிச்செல்வாய்
பள்ளி சென்றால்
வெளியில் வைப்பாய் !

அசிங்கம் அப்பிடாமல்
சிங்கம் உன்னை காத்துநின்றேன்
அசிங்கம் என்று சொல்லி
அங்கு மூலையிலே போட்டாயே!

பாரமற்ற என்முதுகு
பாரமுற்ற உன்னுடலை
பார்த்துத்தான் தூக்கியதா?
நேரமற்று போனாலும் ஒருநாளும்
எனை மறந்து நீ போனதில்லை
நினைவிருக்கா !

தீண்டாத பொருள் என்
துணையின்றி நீ
புனிதத்தை அடையும் வழி
தாண்டத்தான் முடிந்திடுமா?

உனக்காக உழைத்த நான்
இளைத்துப் போனேனே இதுவரை
எனக்காக எதையும் நான்
சேர்க்கவில்லை தேய்ந்ததைத்தவிர!

உன் பாரம் தந்த பரிசு
என் முகத்தில்
உன் பாதத்தின் பதிவு!

இதுகாறும் பெருமையுற்றேன்
உன்காலில் இருந்தவரை
இந்நாளில் வெறுக்கின்றேன்
உன் கை என்னை
தொட்டெறிந்ததனால்!

இருக்கும் வரை தேவைப்பட்டேன்
பட்டி அறுக்கும் வரை பாடுபட்டேன்
தோலறுந்த நிலையில்
எட்ட எறிந்தாயே உள்ளம்
சுட்டு நின்றாயே!


            - உமர் அலி முகம்மதிஸ்மாயில்


சொர்க்கமும் நரகமும்!

By : Unknown





ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.

ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.

முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும்இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்…. அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!

எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர். பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர். பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்குஅழைத்துச் சென்றார்.

அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. 

ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர்ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. கருமி கனவிலிருந்து மீண்டான். 

ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.


பூவே

By : Unknown

















மலரின்
பிரசவ வலி
மலர் சூடும்
மாந்தர்களை விட
மரத்தின் கீழ்
தூங்கும்
நாய்களுக்குத்தான்
புரியுமாம் !

அதனால்தான் என்னமோ
நாய்கள்
பூப்பறிப்பதில்லை?

பூகம்பத்துடன் பூத்தாலும்
பூ சிரிக்கத்தவறவில்லை
அது நமக்குப்ப்ழக்கமில்லை!

பூவின் பூப்பு
பூவைக்கே புரியாதோ?
தேனின் இனிப்பு
பூவுக்கே தெரியாது!

மென்மையான
மலர் இதழ்களின் கண்ணீர்த்தேன்
மட்டும் அவ்வளவு கடினமாக
இருப்பதுவும் எதனாலோ?

மலரின் கண்ணீரை
உண்டு மகிழ்கின்றது
தேனீ
உனது கண்ணீரை மற்றவர்க்கு
விருந்தாக்கும்
பூவே ஒரு தாய் நீ


               - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

ஒற்றை மரத்தோப்பு !

By : Unknown













தேர்தல் மேகம்
வான் பிளக்கும் கோசம்
ஊர்களெல்லாம்
கொடி பறக்கும்!

பேசப்பழகிடும்
பெரியோர்கள்
ஏசித்திரியும்
சிறியோர்கள்

மயிலாடுது
குதிரை பாய்ந்தோடுது
நாயொன்று வந்து
மரத்தை அன்னாந்து
பார்த்துக் குரைக்குது!

செருக்குப் பிடித்தமரம்
அருகிலே நிற்கும்
நாணலை பார்த்து
அருக்குக்காட்டி
நகைக்கிறது!

நாணல் சொல்கிறது
நானும் நாளைக்கு
விழுதுவிட்டு
நீயாவேன் என்று!

அன்று
வேர்கள் முக்கி
முனகி நீர் கொடுக்க
இலைகள் காய்ந்து கருகி
சூரியச்சோறாக்கி
வளர்ந்த மரம்
இன்று
பூவும் பிஞ்சும்
காயும் கனியுமாய்
கலகலக்கிறது!

மலர் பறிக்க ஒருகூட்டம்
கனி உண்ண ஒருகூட்டம்
மரம் தறிக்க ஒரு கூட்டம்
மல்லுக்கட்டுது

வேரிலே மருந்திரிக்காம்
வேர் தோண்டும் கூட்டமொன்று
தளிரிலே விருந்துண்டு
களித்திருக்கும் மறு கூட்டம்!

பட்டை உரித்து
கசாயம் காய்ச்சி
ஆயுளை கூட்டுகிறார்

வெட்டை வெளிதானே
வேலிகட்டி வளைத்திடவே
நினைக்கிறார் பலபேரு!

கிளை வெட்டி
நிலை செய்து
நிலையிலே சாய்ந்து நிற்கிறார்
நிலைதடுமாறி விழவும்
பார்க்கிறார்!

அடிமரம் ஆடவில்லை
நிலம் சாய்ந்து விடல!

மரம் அழிக்க
தவம் செய்தார்
தவம் கலைந்து
தலை சொறிந்தார்!

சில பறவைகள்
காலத்துக்கு காலம்
வந்து கொஞ்சிக்குலாவி
கூடுகட்டி
இனம்பெருக்கி செல்கின்றன!

காகம் மட்டும்
கரைந்து கொண்டு
வந்தவர் போனவரின்
எச்சில் இலைகளை
துப்பரவு செய்கிறது!

சிலவேளை
காகம் கத்துதென்று
கல்லெடுத்து எறிகின்றார்!

நச்சுப்பாம்பொன்று
பச்சை நிறத்திலே
மூச்சடக்கி நேரம்பார்த்து
ஒளித்திருக்கு!

அடியிலே கறையான்
வீடு கட்டிக்கட்டி
மீண்டும் மீண்டும்
சிதைக்கிறது

முடியிலே கழுகு
அடியிலே உலவும்
இரை கௌவ
காத்திருக்கு!

நரிகள்
மரநிழலில் கூடி
மாநாடு நடத்துகின்றன !

மாடுகள் நிழலில்
அசைபோடுகின்றன!

கழுதைகள் இன்னும்
சுற்றுவந்து
சுமைகளை
சுமந்து கொண்டே
இருக்கின்றன!

பச்சோந்தி
பச்சிலைக்குள்
மறைஞ்சிருக்கு !

கோழைகள்
அடிக்கடி
கிளைகளில்
தூக்குக்கயிறு மாட்டி
தாமாக மாய்ந்து
விடுகின்றனர்!

குயில்
விடுதலை கீதம் பாடிய
மரம்
இடியாய் சிலர்
முழங்கிய
சுரம் ...இன்னும் கேட்கிறது

யானைகள்
முதுகு சொறிய
சிலவேளை
மரத்திலே உரசுது !

ராசா
மரத்தை
நிறம் மாற்றப்
பார்க்கிறார்

கூஜா
தூக்குவதாய்
கைவைத்து
தூக்குகிறார்!

கருங்காலி
மரமன்றோ ?
இரும்பிலும்
கனமன்றோ ?

ஒற்றை மரத்துத்
தோப்பு இது
ஒருவரின் சொத்தல்ல
ஊராரின் சொத்து இது !

தனியுரிமை இங்கு இல்லை
உரிமைக்காரன் யாருமில்லை
யாவருக்கும் உரிமையுண்டு
ஒதுங்கி நிற்கத்தேவையில்ல!

             - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

நிலவு

By : Unknown

















தடுக்கி நீ தண்ணீரில்
விழுந்தாயோ வெண்ணிலாவே ?
பிடித்து உனையாரும்
தள்ளினரோ சொல்லுவாயா ?

உயிரை மாய்க்க நீ
வீழ்ந்தாயோ
எனை பார்க்க
நீரில் தவழ்ந்தாயோ ?

துரத்த துரத்த ஓடுகிறாய்
துடித்து துடித்து நீ ஆடுகின்றாய் !

தூர நின்று நீ சிரிக்கின்றாய்
ஓரக் கண்ணடித்து அழைக்கின்றாய்!

தங்கத்தட்டு மிதக்குதடா
நீரில் பட்டு தெறிக்குதடா
நெஞ்சைத்தொட்டு
இழுக்குதடா!

அள்ளிப்பார்த்தேன் உள்ளங்கையில்
அதில் ஆடும் வதனம் தெரிந்ததடா !

ஊஞ்சலொன்று ஆடுதடா
காணும்போது
சஞ்சலங்கள் தீருதடா!


           - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

பதின்ம வயது...

By : Unknown











வண்ண வண்ணமாய்
மனதும் இறக்கைகள்
முளைத்து வண்ணத்து பூச்சியாய்
சிறகுகள் தட்டி சிகரங்கள் தொட
துடிக்கின்ற வயது...
பதின்ம வயது....!

அரும்பு மீசையோடு சேர்ந்தே
ஆசைகளும் தளிர்விட்டே
அறிவுரைகளை தகர்த்தே
பிடிவாதங்கள் வலுவாக
பற்றிக்கொள்ளும் வயது...
பதின்ம வயது....!

எதிர்பாலின ஈர்ப்பும்
தன்னிச்சையான செயற்பாடும்
தலைக்கணமும் குடிகொண்டு
வாழ்க்கையை அலங்கோலம்
செய்யும் வயது...
பதின்ம வயது....!

ஆர்வக் கோலாற்றில்
காண்பவை மீதெல்லாம்
ஆசை கொண்டு அதற்காக
அங்கும் இங்கும் திரிந்து
அலை மோதும் வயது...
பதின்ம வயது....!

அவன்(ள்) எதிர்பாலினம் மீது
காதல் கொள்வதும்
அதற்காக ஏங்கி தவிப்பதும்
காதலன்(லி) நினைவுகளை
சுமந்து தவிக்கும் வயது...
பதின்ம வயது....!

கல்விச் சாலை மறந்து
பாட நூற்கள் களைந்து
கவிதை நூற்கள் மட்டுமே
கதியென வீழ்ந்து கிடக்கின்ற
இரண்டும் கெட்டா வயது...
பதின்ம வயது....!

கண்கள் திறந்து கொண்டே
உறக்கமும் துலைத்து விட்டே
கனவுகள் பல காணுகின்ற
எதிபார்ப்புகள் அதிகம்
நிறைந்த வயது...
பதின்ம வயது....!

நாம் அனைவரும் சுவைத்து
சிலருக்கு இனிப்பாக !
பலருக்கு கசப்பாக !!
கடந்த வயது...
பதின்ம வயது....!


         - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்



தடம்

By : Unknown









தூரமென்பது வெற்றியின்
படிகள் முயற்சியென்பது
வெற்றியின் ஏற்ற வழிகள்

அகண்ட வானமும்
அகலிய நானிலமும்
வாழ்க்கையின் தடம்
குறிக்கும் வரைவுத்தளம்

உறுதியோடு கடந்ததில்
இலக்கை அடைவாயெனில்
வெற்றிக் காணுவது நிச்சயம்

நீ கடந்து
விட்டுச் சென்ற பாத
சுவடுகளை நோக்கி
பிறர் பின் தொடவாரேயானால்
அது அவர்களுக்கு
வாழ்வில் முன்னேற பரிச்சயம்!


         - கவிஞர் முபாறக்

எங்கே போனது அந்த விமானம் .....?????

By : Unknown












வானம் உற்றும நோக்குகிறது
வனம் எட்டித் தேடுகிறது
பூமி சுற்றி தேடுதல் வேட்டையில்....

இலக்கை நோக்கி பறந்திட
நின்மதி பெருமூச்சி விடுமுன்னே
என்ன மந்திரமோ மாயமானது....

தொலைத்து விட்டு அவதியில்
பெரும் பாடு படுகிறது
ஏற்றிவிட்ட தேசம் புழுங்கி வாடுகிறது

கனவோடு வந்தவர்கள் சிலர்
கற்பனையோடு சென்றவர்கள் பலர்
வரவை நோக்கி காத்திருக்க
வரவில் இன்பம் பூத்திருக்க ஏமாற்றி
பதற வைத்து புதிராய் போனது .....

வாணிபம் செய்ய செல்பவனும்
வணிகத்திற்காய் வந்தவனும்
விடுமுறை கழிக்க செல்பவனும்
தொழிலை தேடி வருபவனையும்
முகமன் கொடுத்து வரவேற்றது
சிப்பந்தியின் விமானம்.....

பறக்கிற தூரமும் இறங்குற வரைவும்
தரையிலிருந்து உச்சியின் உயரம்
மேகத்தின் அளவுகோலும் பாது
காப்பு கவசங்களும் கருப்பு
தகவல் தாங்கிய பெட்டியும்.....

தொடார்பு பொருத்திய கருவியோடும்
தொடர்பெல்லை நோக்கியே பறந்தது
தொடர்பின்றி எங்கேயோ விஞ்ஞான 
தொழில்நுட்பம் மறைந்தது

கிழவியை கொள்ளிவைக்க மகனை
தேடுகிறது நெடு நாள் பிரிந்து வாடும்
மல்லிகை முதலிரவு கனவோடு 
வீற்றிருக்கிறது கைப்பிடிக்கும் 
மணவாளனின் கற்பனையும்
சிதற வைத்து கதற எங்கே 
மறைந்ததோ..........?

சிலர் கடலில் மூழ்கி பார்க்கின்றார்
தரையில் தடையத்தை தேடி அலசுகிறார்
பெரும்பாலானோர் கடத்தப் பட்டிருக்கும் 
என்கின்றார் உடைந்து சிதறி விட்டதோ
முன்முனுக்கின்றர்......

எது எப்படியோ சேதமின்றி உயிர்
சேதாரமின்றி இலக்கை நோக்கிய
அவர்களின் இலட்சியப் பயணம்
வெற்றியடைய இறைவனிடம் 
இறைஞ்சுபவனாய்...

தாய்க்கு மகனும் துணைவிக்கு
கணவனும் குடும்பத்திற்கு
தலைவனும் திரும்பி கிடைக்கப்பெற
என் தொப்புள் கொடி உறவுக்காய்
மன்றாடு பவனாய் பிரார்த்திக்கிறேன்


        - கவிஞர் முபாறக் 


தூங்காத இரவுகள்

By : Unknown











தூங்காத இரவுகளில்
ஏங்கிடும்
என் நினைவுகளுக்கு
என்போல
விடிய விடிய விழித்திருக்கும்
நட்சத்திரங்களே சாட்சி!

உலா வந்த
தென்றல்கூட கண்டதே
இக்காட்சி!

தூக்கம் என்னை
தூக்கி வீசிவிட்டு
தூரத்தே
நடைபயிலப் போச்சி !

இத நினைக்கையிலே
கொதிக்குதடி
என் மூச்சி!

நிலாவே
உன் தோழியிடம் நீ
சொல்வாயா
என் சேதி!

உன்னுடன்
உலாக்கூட்டி வருவாயா
ஒரு தேதி!

அருகிலே நானிருந்தால்
அனுதினமும் பார்த்திருப்பேன்
தூரத்திலே நானிருக்க
நேரிலே காண்பதெப்போ?


        - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

"கட்டில் வேதனை"

By : Unknown








ஊர்மேயும் பருவத்
தவறுகள்
உணர்ச்சிகள் வற்றிய
ஆண்மைகள்
வருடலுக்காய் ஏங்கும்
பெண்மைகள்

கட்டிலில் உணவாக
தாம்பத்யம்
எங்கோ உண்டகளைப்பில்
ஆண்மை
உண்ண ஆளற்று
பெண்மை

விழிப்பில் பெண்
விழிகள்
ஆழ்ந்த உறக்கத்தில்
ஆண்விழி
நரகவேதனை உடுத்தும்
நாழிகைகள்

ஆண்மை துலைத்த
ஆண்மைகள்
மலட்டுப் பட்டம் சுமக்கும்
பெண்மைகள்
வார்த்தை ஜாலங்களால் குத்தும்
உறவுகள்

தவறுகளை தொடரும்
உறவுகள்
ஊருக்காக வாழும் போலி
வாழ்க்கை
மண்ணிக்க முடியாத
மனிதாபிமானம்

(உண்மையுள்ள சில சோகமான வரிகள்)


         - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

தூக்கணாங்குருவி கூடு

By : Unknown











கோதி கோதி உரித்த
நார் அலகுகளில்
கொத்திக் கொண்டு
வந்தேன்

ஒன்று ஒன்றாய்
அழகாய் சேர்த்து
ஒட்டி ஒட்டிப் பின்னி
ஒப்பேத்தி விட்டேன்

நாரிலையில் ஒரு கூடு
நாங்கள் வாழ நாறிடாத வீடு

பொறியியல் படிக்காமலே
கச்சிதமான கட்டிட
வேலைப்பாடு நிறைந்தது
தூக்கனாங் குருவி கூடு

நங்கூரமிட்டு தொங்குகிற
நயமான வீடு
அழகிய தோட்டங்கள் மேலே
அசைந்தாடும் வீடு

வண்டுகள் இல்லாத மூங்கில்
காட்டிலே ஊமையாய் திரிகின்ற
தென்றலும் இங்கு வந்தால்
களிப்புடனே ஊஞ்சல் ஆட்டம்

கதவுகள் இல்லாத நிலை
கவலைகள் கொண்டதில்லை
சன்னல்களும் இங்கு இல்லை
சற்று சகித்துக் கொள்ளவேணும்

பின்னல்களும் உண்டு
சற்றும் பேதலித்ததில்லை
அவ்வழியே மங்காத வெளிச்சம்
மாறி மாறி உள்ளே தெரிக்கும்

குஞ்சுகளை ஏந்தியும்
குலவைகளும் இட்டு
குதூகலிப்பும், நிம்மதியும்
நேர்த்தியான வாழ்வு

சுற்றங்களும் உண்டு
சூழ்ச்சிகளோ இல்லை
பற்றியதோ வாழ்க்கை
பசுமை நிறைந்த வாழ்க்கை

தொங்கியாடும் வீட்டினுல்
தூக்கனாங் குருவியின்
"வாழ்க்கை"


    - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

அரிசி

By : Unknown







வயிற்றுப்பசி
போக்கும்
வெள்ளை
மணிகள்

இந்த அரிசி
மணிகள்

பாத்திகட்டி
தண்ணிர்
விட்டு

பதமாய்
ஏர் பூட்டி
உழுது

பக்குவமாய்
விதை
விதைத்து

பாடுபட்டு
பெற்று
எடுக்கிறான்

உழவன்

"அரிசியை"


     - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

ஊடல்

By : Unknown



என் மனக்கிளையில்
முதல் பூத்த மல்லிகையே
பொன் மாணிக்கத்தால்
செதுக்கப்பட்ட பெண் சிலையே

உன்னை காண துடிக்கிறது
கண் விழிகள்
மூட மறுக்கிறது
என் இமைகள்
தொட்டணைக்க நினைக்கிறது
என் மனம்
சுட்டெரிக்கிறது...
உன் மௌனம்
விட்டு விடு
என்று நினைக்க
காதல் ஒன்றும்
காற்றாடி நூலல்ல கண்ணே

வித்திட்டவன் நான்தான்
விலகி நிற்பவள்
நீதான் பெண்ணே
என் காதல் விதையாகி
முளையாகி
ஆழ விருட்சமாய்
அசை எனும்
விழுதுகளோடு...
அதை சுக்கு நூறாகி
சுட்டெரித்து
அதில் தீ மிதிக்க
நான் கடவுள் பக்தன் அல்ல
காதல் பித்தன் பெண்ணே

      - கணேஷ் கஜினி 

தூக்கு மேடை

By : Unknown








பத்தாண்டுகள்
சுமந்தாலும்

தாய் சுமந்த
பத்து மாதத்திற்கு
ஈடாகாது !

பிரசவ வலியும்
உயிரின் உன்னவமும்
இக்கயிருக்கு
தெரிவதில்லை

ஆதால் கழுத்தை
நெருக்கையில் கூட
அகத்தால் இறுக்கம்
தொப்புள்கொடியென
இரக்கம் காண்பதில்லை!



    - கவிஞர் முபாறக் 

விதவை

By : Unknown













மணாளனை
மரணம் என்னும்
கொடுங்கோலன்
பறிக்கையில்
பதைபதைக்கும்
உள்ளத்தோடு
பரிதவித்து நிற்பவள்
விதவை !

உன்னத உறவைப்
பிரிந்து குழந்தைகளின்
அப்பா எப்போ வருவார்
எனும் வினாவிற்கு
விடை பகிர முடியாமல்
கண்ணீரோடு நிற்பவள்
விதவை !

எந்த முடிவும் எடுக்க
நாதியற்று கணவனின்
பாதம் சுவனமென
வாழ்ந்தவளை
அட்டவணை போட
அழுத்தப்பட்டவள்
விதவை !

கணவனின் நினைவுகளை
அசை போட்டு நான்கு மாதங்களும்
பத்து நாட்களும்
கடக்க முயல்பவள்
விதவை !

தான் பெற்ற செல்வங்களின்
எதிர் கால வாழ்விற்காக
தன் சோகங்களை
தள்ளி வைத்து
நல்ல தாயாக
பரிணமிப்பாள்
விதவை !

கடமைகள் கட்டுக்கட்டாய்
கிடந்தாலும்
நம்பிக்கை என்னும்
தும்பிக்கை கொண்டு
தடைகளை தாண்டி
தடம் பதிப்பாள்
விதவை !

கணவனின் வாக்கினை
தன் நிகரில்லா
அன்பினால்
சிரமே கொண்டு
அவனை நெஞ்சிலே
சுமந்து வாழ்வாள்
விதவை !

நம் சமூகத்தில் வாழும் விதவைகளிற்கு
சமர்ப்பணம் செய்கிறேன் .


இவள் உங்கள் தோழி
- றமீஸா மொகீடீன் .

சுன்னத்துக் கலியாணம்!

By : Unknown










உம்மாவும் வாப்பாவும்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்
வெள்ளாமை வெட்டினா
சின்னவனுக்கு சுன்னத்தாம்!

வீட்டுக்கு கூரை
புதுக்கிடுகாலே
ரோட்டு வேலியும்
புதுப்பொலிவோடே!

நீத்துச்சுவரு
ஊத்தையை மறைச்சி
சுண்ணாம்பு வெள்ளை
சிரித்திடும் முறைச்சி!

கால்நடையாய் போய்
உம்மாவும் சொல்வா
ஆள் இடையில் கண்டால்
வாப்பாவும் சொல்வார்.!

அசருக்கு கல்யாணம்
பகலைக்கு விருந்து
"அயத்துப்போகாம "
எல்லாரும் வாங்க!

அல்லயல் காரர்கள்
அழையாமல் வருவாங்க
பிள்ளைகள் எல்லாம்
விளையாடி மகிழ்வாங்க!

வாழைக்குலைகள் புகையிலே
பழுக்கும்
வரும் ஆட்களுக்கு வெற்றிலை
படிக்கம்!

தென்னை மரத்திலே
கட்டிய பீக்கர் மறைவிலே இருக்கும்!
ஆனால் பாட்டின் சத்தம் நல்ல
தூரத்திற்கு கேட்கும்!

தூக்கிலே "சருபத்து"
தட்டத்தில் தீன் பண்டம்!
வாய்க்குள்ளே வெற்றிலை
சட்டையில் வடியும்
வெற்றிலைச்சாறு!

வேலைகள் பிரித்து
பொண்டுகள் செய்வார் வெண்
சேலைகள் பிரித்து
வெள்ளையும் கட்டுவார்!

பந்தற்காலிலே கையினைப்போட்டு
பையன்களெல்லாம் சுற்றி சுழல்வார்
சொந்தக்காரர்கள் சுற்றமும்
நேர காலமாய் வந்து சேர்வார்!

குருத்து மணல்
பரப்பிருக்கும்
வாசல்
பளபளன்னு மெருகேற்கும்!

குருத்தோலை கிழித்தெடுத்து
வருவோரை வரவேற்கும் தோரணம்
கருத்தோடு வரவேற்று
இருப்பாட்டி கதைபேசும் உறவினம்!

சாப்பிட்ட பின் குளிக்காதே
சத்தமிடும் வாப்பா அன்று மட்டும்
சம்பிரதாயத்துக்காய் சாப்பிட்ட பின்னர்
கிணற்றடியில் குளிக்கவைப்பார்!

புதுச்சட்டை பனியனோடு
சாரமும் மாப்பிள்ளைக்கு
உடுப்பாட்டி மகிழ்வார்கள்
கோலத்தைப் பார்த்து
பூரித்துப் போவார்கள்!

ஊரெல்லாம் சுற்றிய
மாப்பிள இறுதியில்
பள்ளி உண்டியலில் போடுவார்
காணிக்க!

அண்ணாவி தலைமையில்
பொல்லடி நடக்கும்
தந்தந தானா என்று
சொல்லடி கேட்கும் !

மல்லிகை மாலை நல்ல டொபியாலே மாலை
தலையிலே தொப்பி
காலுக்குச்செருப்பு!

மச்சிமார் மதினிமார்
மருதோன்றி போடுவார்
அச்சின்ன சின்னத்து
மாப்பிளைக்கு!

பூவுடன் பொரி சேர்த்து
தலையிலே சொரிவார்
நாவுடன் உதடு சேர்த்து
குரவையும் இடுவார்!

"பகல்வெத்தி"எரியும்
பிள்ளை பயப்படுவதும் புரியும்
படிக்கம் அடிக்கலம்
அணைந்த பகல்வெத்திக்கு!

செப்புக்கு வைத்தவர்கள்
திரும்பச் செய்வார்கள் புதியவர்
பெயரை கொப்பியில் குறித்து
பத்திரமாய் பதிவார்கள்!

முன்னுரிமை தரவில்லையாம்
மூத்த மாமி மூலையிலே
தன்னுரிமை விடமாட்டேன்
சின்னம்மா பிடிவாதம்!

சின்னத்து மாப்பிள்ளைக்கு,
கல்யாணம் அவர்களுக்கு!

நேரம் நெருங்க நெருங்க
பிள்ளையின் முகம் வாடும்
எண்ணத்தில் பயம் ஓடும்
தூரமாய் ஓடி ஒளிஞ்சி
கொள்வான் சின்னத்து மாப்பிள்ளை!

விசயம்தெரியாத தம்பியும்
தங்கையும் காட்டிக்கொடுத்து
மாப்பிள்ளையிடம்
துரோகிப்பட்டம் பெறுவார்கள் !

அதிகாரி தளபதியாம்
ஒய்த்தா"அரசனாம்
மாமா வாயில் காவலன்
வாப்பாக்கு கிறுகிறுப்பாம்

காட்டாயப் பாட்டாபிசேகம்
களைகட்டி நடக்குது
பலநாள் பரபரப்பு
நொடிக்குள்ளே முத்தாய்ப்பு.

உரல் அரியாசனம்
மைக்கத்தியே சாமரம்
வீரக்கொள்ளி சாம்பலே
தூவுகின்ற பூவு!

உரலுக்கு மேலே வெள்ளைச்சீலை
அதுக்கு மேலே குருத்து மணல்!
அரக்கனைப்போல் கிடுக்குப்பிடி
அதுக்கிடையில் துண்டுவிழும்!

பெரிசா நோவு இல்லை
பெரிய குருதியில்லை
இரவாக நோவு வரும்
சிறிது சிறிதாக கூடிவிடும்!

விட்டத்தில் நூல்தொங்கும்
நூலிலே துணி தொங்கும்!
கிட்டத்தில் இருந்துகொண்டு
காலிலே கால்போட்டு கால்
ஒட்டாம பார்ப்பாக மாமாவும் மச்சானும்!

தூங்கினா புரளுவானாம்
மாப்பிள்ளை
தூங்காம விழித்திருந்து காப்பாங்க
சில ஆம்பிள்ளைங்க!

கூட்டாளிமாரெல்லாம்
கிட்டவரப்பயந்துகொண்டு
எட்டிப்பார்ப்பார்கள்
வாசல் படியில் நின்றுகொண்டு !

தண்ணிக்கு கட்டுப்பாடு
காலையில் சாப்பிடப் புட்டு
நல்லெண்ணெய் நாட்டுமுட்டை
வேளைக்கு ஊட்டுவார்கள்!

தண்ணிக்கு பதிலாக
பிளேன் சோடா
மத்தியானம் சோறோடு
வெள்ளைப்பூண்டு முளகாணம்!

தற்செயலாய் புண் பழுத்தால்
தானாக பழி விழும் அவன்மேலே
தான்ணீர் சுரம் என்று
பெயர் வரும் தன்னாலே!

பனங்கொசு படையெடுக்கும்
பட்டாளமாக
சினங்கொண்டு விசிறியால்
விசிறுவாங்க விரட்டியடித்து !

சீலை கழற்றும்போது
சீவனும் போய்வரும்
காலைப்பிடிப்பவருக்கு
காலால் உதை விழும்!

சீலை களற்றியபின்
காலை அகட்டிக்கிட்டு
சாரன் பட்டிடாம
தூக்கிக்கிட்டு நடப்பாரு
சின்னத்து மாப்பிள்ளை!

"அசறு"விழுந்தவுடன்
ஏழாம் நாளன்று
தலையிலே நீரூற்றி
தண்ணி வார்ப்பாங்க!

முதன்முதலாய் போனவுடன்
பள்ளி நண்பரெல்லாம்
சுற்றிநின்று அனுபவத்தை கேட்டு
ஆளுக்காள் பகிர்வாங்க

சிலநாளைக்கு
எல்லாரும் ரவுசருடன்
இவர்மட்டும் சாரனுடன்
மாப்பிள்ளை கோலத்தில்!

கிழக்கிலங்கையில் எமது பிரதேசத்தில் சாதாரணமானவர்கள் தமது ஆண்பிள்ளைகளுக்கு செய்யும் கத்னா என்றழைக்கப்படும் விருத்தசேதனம். எண்பதுகளிலும் அதற்கு முன்னரும் இப்படித்தான் நடைபெற்றது.சுன்னத்து/சின்னத்து என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும்.எதிர்கால சந்ததியினர் அறிந்து வைத்திருக்க இந்த ஆக்கம் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 - அல்லையல்-அக்கம்பக்கத்தார்
 - அசறு-மதியத்துக்கு பிந்திய நேரம்,புண்ணின் காய்ந்த தோல் .
 - அயத்துப்போகாம-மறந்திடாமல்
 - பகல்வெத்தி-மத்தாப்பு.
 - செப்பு-சீர்

     - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

தூக்கு மேடை

By : Unknown









என் அனுமதி 
இல்லாமல்
என்னிடம் அழைத்து
வந்து...

தண்டனை என்னும்
பெயரில்
உயிர் பறிக்கின்ற
நீதிகள்...

எப்படி சொல்வேன்
என்னை
மன்னித்து விடுங்கள்
என்று...

கொலை குற்றவாளி
என்று
தீர்ப்பு அளிக்கப்பட
அவனை(னை)...

கொலை செய்யும்
எனக்கு
என்ன தீர்ப்பளிக்க
போகிறாய்...

அவர் மரணத்துக்கு
நானும்
காரனமாகிறேன்...

சாட்சியும் ஆகிறேன்
என்னை
யாருமே தண்டிப்பதில்லை...

- முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

பதின்ம வயது

By : Unknown












உணர்வுகள் கலவையாய்
கலந்து
உணர்வுகள் புதிதாய்ப்
பிறக்கும் வயது!

புரியாததெல்லாம்
புரிந்ததென்று
பெரிதாய்
பீத்திக்கொள்ளும் வயது!

பூத்திருக்கும் வயது
காத்திருக்கும் வயது
எதிர் பார்த்திருக்கும் வயது!

பிரியவே மாட்டோம் என்று
புரியாமல்
பெரிய பெரிய
சத்தியம் செய்யும் வயது!

வீட்டுக்குத் தெரியாமல்
திருட்டிலே
சித்துக்கள் புரியும் வயது!

துள்ளிக்குதிக்கும் வயது
அன்பை
அள்ளிப்பருகும் வயது!

நண்பர்கள்
கடவுளாகும் வயது
கவிதைகள் நண்பராகும்
வயது!

மீசையும் ஆசையும்
அரும்பும் வயது
இசையும் கலையும்
ரசிக்கும் வயது!

கனநேரம் நீ நிற்பாய்
கண்ணாடியின்
முன்னாடி
கண நேரம் சிந்திப்பாய்
சிந்தனையில்
தள்ளாடி !

ஒற்றைக்காலில் நின்று
கேட்டதை
பெற்றுக்கொள்ளும் வயது!

பாடப்புத்தகம் கசந்து
கவிதைப்புத்தகங்கள்
இனிக்கும் வயது!

சோதனை செய்யும் வயது
அதிகம்
சாதனைகள் செய்யும் வயது!

கனாக்காணும் வயது
வினாக்களுக்கு
விடைகாணும் வயது!

அடிமையாகும்
அடிமையாக்கும் வயது!

ஏமாற்றங்கள் தாங்காத வயது
எதிர்பார்ப்பதை எண்ணி
தூங்காத வயது!

சோதனைகள் தாங்காமல்
சாவதனை விரும்பும் வயது!

பூஞ்செடிகள் வளர்ப்பார்
நெஞ்சினிலே காதல்
வளர்ப்பார்!

பொல்லாத வயது
நிலத்தில்
நில்லாத வயது!

மீண்டும் வராதது
அதன் விளைவு
வாழ்வை விட்டுச்செல்லாது

தொட்டுச் சென்ற நினைவுகள்
மீட்டுபார்க்கையில்
சுகமும் உண்டு
சோகமும் உண்டு!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்

கருக்கலைப்பு

By : Unknown









பருவ மயக்கத்தில்
பழகிய மோகத்தில்
உன்னுள் சீறியெழுந்த
கார்மோன் வேகத்தில்

வீழ்ந்துவிட்டாய் நீயும்
கச்சிதமாய்
அவன் வீசி விரித்த
காதலெனும்
வலையில்

காதலெது,
இச்சையெது,
பகுத்தறிய முடியாது
வயதிலே
தவறியும் விட்டாய்
வாழ்க்கையை

பெண்ணியம்
காத்துப் போற்ற
வேண்டிய உனை
தூற்றுவர்
இந் நிலைக்காய்

சிற்றின்பத்தின்
நினைவாக
கருவறையை
தாழிட்டு ஓர்
கல்லறை

நிறுத்து!

நீ உட்கொள்வது மருந்தல்ல
கருவறையில் கல்லறை
கட்ட கச்சிதமாய் அனுப்பும் செங்கட்டிகள்!

குற்றம் செய்தது நீ
தண்டனை மட்டும்
குழந்தைக்கா?

ஆபத்து என்றால்
தன்பிள்ளை
அம்மாவை நாடும்
அம்மாவே ஆபத்து
என்றால்,
அதன் மனம் வாடும்.

நீ அரக்கனிலும்
கொடியவள்,
அரக்கன் கூட
குழந்தைகளை
பிறந்த பின்தான்
கொன்றான்.
நீ பிறக்கும்
முன்னமே
அழிக்கின்றாய்.

பிறப்புச்சான்றிதழை
எதிர்பார்த்திருக்கும்
குழந்தைக்கு இறப்பைச்
சான்றிதழாகக்
கொடுப்பது என்ன
நியாயாம்?

பிறந்தவுடன் சுதந்திரம்
பறிபோவது வழமை
பிறப்பதற்கே சுதந்திரம்
மறுக்கப்படுவது கொடுமை

ஆட்சி கலைந்தால்
அடைந்துவிலாம்
அடுத்த ஐந்தாண்டில்
அமைச்சு பதவியை

கருவைக் கலைத்தால்
தாய்மை நிலையை
எந்தாண்டிலும்
அடைய முடியாது.

மறுமுறை
உரைக்கின்றேன்..
அதுன்னை
உருக்குலைக்கும்
என்பதை
உணர்ந்துவிடு


      -முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்

குடை

By : Unknown










மழையில் விரிந்தது
நனைகிறேன்
வெயிலில் சுருங்கி
காய்கிறேன்

மழை காலம்
ஆரம்பித்தாலே
என்னை அனைவரும்
தேடுவர், மற்றை
நாற்களில் அவர்களது
ஞாபகங்களிலும்
நானில்லை...

நான் நனைந்து
கொண்டே
என்னை நம்பியோரை
நனையவிடாது
காக்கின்றேன்

என்றும் ஏழைகளின்
கைகளில் நான்
தவழுகிறேன்
அவர்களின் நம்பிக்கை
நிறைவேற்றுபவனாய்...


    - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

ஈகை செய்

By : Unknown










தேடித் தேடிப் பெற்றதால்
என்னவோ
செல்வந்தன், செல்வம்
தண்ணீரென ஓரிடமும்
நிற்காமல் ஓடுகிறது...

உண்ணாமல், உடுத்தாமல்
பதுக்கி வைத்தும்
உறங்காமல் விழித்துக்
காத்து நின்றும்...

காண்ணாக காக்கின்றாய்
நீயும் காசினை
அது காக்காமல் கூட போகும்
ஓர் நாள் உன்னை...

நீ மண்ணாக போகும்
எதிர் நாளில்
உன்னை பாதிக்காது போகும்
இந்த உலகம்...

வாடி நிற்கும் வறியவர் தேவையறிந்து
நாடி வந்து ஈவதே நல்லவர்
செய்கை ஆகும்..

நல்லெண்ணம் கொண்டு
நீயும்
இனிதே என்றைக்கும்
ஈகை செய்...


   - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

மதுவும் புகைத்தலும்

By : Unknown








இருவிரல் இடையே
முளைத்த புது
விரலாய்...

இன்றைய மானிடர்
கைகளிலெங்கும்
புரளுகிறது...

மரணத்தின் பாதைய
நோக்கிய அழைத்துச்
செல்கிறது...

குடும்பமும் சீரழிகிறது
சிகரட்டும், மதுவும்
தலை தூக்கியதால்...

வந்துவிடு வெளியே
குடியும், புகையும் உன்னை
என்றும் சீரழிக்கும்

இயற்கையே என்றென்றும்
உன்னை அரவனைக்கும்..

இவ்விரண்டும் இல்லாத
விசேஷங்களை கூட
தரக்குறைவாகவே
கருதுகின்றனர்...

"எம். ஏ. அஸ்ரப் ஹான்"

முதல் காதல்

By : Unknown

















இருவர் கண்களும்
கலக்கின்ற நிமிடங்கள்
இருவரும் மௌனங்கள்
புரிகின்ற தருணங்கள்

இருவர் கால்களும் சேர்ந்து
தொடர்கிற நடனங்கள்
முதல் காதலும் பிறக்கின்ற
இளமைப் பருவம்

ஏதேதோ மாற்றங்களும்
நடக்கின்ற என் வயசும்
சிறகுதட்டி பறக்கும் பட்டாம்
பூச்சியாய் என் மனசும்

ஒற்றை மரம் போலவே செத்துப்
பட்டுப் போய்க்கிடந்தேன்
உன்னைப் பார்த்த அந்த நொடியே
உயிரும் பிழைத்து துளிர்த்தேன்

மேகங்கள் எல்லாம்
தலைகீழாய் மிதக்க
வெட்கங்களும் வந்து
வார்த்தைகளை விழுங்க

பொத்திப் பொத்தி வச்சு
இருந்த மனசும்
அறிந்தே தொலையுதே
இன்று சுகமாக



                        -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

முதுமைக் காதல்

By : Unknown







காலம் கடந்தும்
கடக்க வில்லை
கண்ணே...

உன் மேல்
நான் கொண்ட
காதல்...

அன்று
ஒற்றை ரோஜா
பரிமாற்றத்தால்
மலர்ந்த காதல்...

இன்றும்
பல மலர்கள்
சேர்ந்த பூங்கொத்தாக...

வயது முதிர்ந்தும்
முடியவில்லை
நாம் கொண்ட
காதல்...

பதினெட்டில்
மட்டுமே மனம்
காதலுக்காய்
வளையுமா என்ன...?

அறுபது ஆகியும்
நம் மனது
வளைகிறது நாம்
கொண்ட காதலில்...

பதினெட்டில் வந்து
அறுபதிலும் இன்று
நிலைத்து நிற்கிறதே
நம் காதல்...

உன் தோல்கள்
சுருங்கிய போதிலும்
உன் தோல்கள்
சாயும் ஆசையோ
சுருங்கவில்லை...

உன்
அழகு போர்த்திய
தோலணிகள் சுருங்கட்டும்...

ஆடை
அலங்காரம் கூட
அணைந்து போகட்டும்...

உனக்கு நான்
எனக்கு நீ
மனம் தளராமல்
கைகள் இறுகப்
பற்றட்டும்...

பெரும் உறுதியாய்
உலகை வெல்லும்
நம் முதுமைக்
காதல்...

காலம் நம்மை
வீழ்த்தி கல்லறை
சென்றாலும் அங்கும்
வாழுமே...

நிரந்தரமாக....


             -முகம்மது ஆரிப் அஷ்ரப் ஹான்


நிழல்

By : Unknown














உனது உருவத்தையே
பிரதிபலித்தாலும்
நிழல்
உனக்கு சொந்தமில்லை !

நிழலுக்கு யாரும்
வெட்டினாலும்
வலிப்பதில்லை
குருதி வடிவதுமில்லை!

புலன்களில்லாத
போலி அது
பலன்களில்லாத
வாலுமது!

உன்செய்கையை
பிரதி பண்ணும்
நிழலுக்கு
என்றும்
உன் பெயரில்லை
அதை
நிழல் என்றுதான்
அழைப்பர்!

உனது காலடியிலே
விழுந்து கிடக்கும்
நிழல்
உன்னை விட்டுப்பிரிய
மனமின்றி
கட்டிக்கொண்டு
அழுவது
தெரியுமா உனக்கு?

உதறினாலும்
விடுகின்றதில்லையே
அதட்டினாலும்
அகன்று
செல்லுதில்லையே!

நீ பார்க்கும்
உனது நிழல்!
உனைப்பார்க்குமா?

இருட்டிலும்
உன்னை அது
தொடர்கின்றது
உன்னால்தான்
அதை பார்க்க
முடிவதில்லை!

ஒளியின் கீழே
சரியாய் நின்றால்
உனக்குள்
மறையும் நிழல்!

இறை அருளை
அள்ளிப்பருக
விலகும்
உன் மன இருள்!


                     -உமர் அலி முகம்மதிஸ்மாயில்

திருநங்கை

By : Unknown








மனதில்
ஊனம் கொண்ட
மனிதர் வாழும்
தேசம் இது...

உடல்
ஊனம் என்றால்
செயற்கை உறுப்புமுண்டு
உன் மன ஊனத்திற்கு...

பெண்(ஆ)னே
எதிர்ப்பால் மீது
நீ கொண்ட
ஈர்ப்பால்...

இன்று
புதுப்பாலாய்
திரிந்து நிற்கிறாய்
அரவாணியாய்...

சிற்பி
அவனின் கவனச்
சிதறலால் செதுக்கிய
சிலையோ நீ...

ஆண் ஜாதி
பெண் ஜாதி
என இரண்டு
இருக்க...

ஆணில் பாதியுமாய்
பெண்ணில் பாதியுமாய்
புது ஜாதியாய்
நீ....

முழுமை
பெறுவது எப்போது ...


          - முஹம்மது ஆரிப் அஷ்ரஃப் ஹான்


மெழுகுவர்த்தி

By : Unknown












இருள் நீ
விலக
இரையாகிறேன்
நான்...

நீயும்
ஒளிரவே
நானும்
உருகுகிறேன்...

உன்
மூச்சில்
காற்றுப்பட்டதும்
நடனமாடுகின்றேன்...

உன்
கையிலிருந்து
நழுவாது இருக்க ...

உருகிய
மெழுகால் நான்
உன் கரம்
பற்றிகொள்கிறேன்...

திரியை
பிரியும் வலியில்
அழுகிறது
உருகும் மெழுகு...

நாழிகை
நாழிகையாக
உனக்காகவே
உயிர் இழக்கின்றேன்...

மாளிகையாய்
மலர்ந்து இருந்த
மங்கை நானும்
மாய்ந்து போகிறேன்...


        - முஹம்மது ஆரிப் அஷ்ரஃப் ஹான்


அப்பா அகாலமாக...........!

By : Unknown










பலவீடு கட்டினாய் நீ
செங்கல் வெட்டி,
உனக்கு
குழிவீடு வெட்டுது
நான்கு
மண்வெட்டி !

யார் பேச்சையும்
கேட்காத நீ
பேச்சு மூச்சற்று
கிடக்கிறாய்
நீட்டி நிமிந்து
படுக்கிறாய்!

சுத்திச்சுழன்ற உன் விழி
குத்திட்டுப்பார்க்கிது
உயிர்போன வழி!

கொட்டும் பறையர்
கும்மாளம் போடுறார்
வீட்டில் அனைவரும்
கூடி நிற்கிறார்!

போலிக் கண்ணீரை
மாலையாய் கொட்டுறார்
கூலிக்கு சிலபேர்
மார்பிலடிகிறார்!

சொத்துப்பிரிக்கிறார்
மனக்கணக்காலே
செத்துப் பிழைக்கிறார்
மணிக்கணக்காக !

திட்டித்தீர்க்கிறார்
திறப்பினைத்தேடி
கொட்டித்தீர்க்கிறார்
குறைகளைக்கூறி!

மூலையில் சந்தணம்
கடமைக்குப் புகைகிறது
சேலையில் ஓருயிர்
கண்ணீரில் புதைகிறது!

எப்ப புதைப்பார்
எப்ப எரிப்பார்
என்ன சுணக்கம்
எனப்பல வினாக்கள்!

கொடுத்தவரெல்லாம்
எடுத்தவரானார்
கடன் கொடுத்தவர் மட்டும்
கேட்கவுமானார்!

விறைத்த கட்டைவிரல்
மையிலே குளிக்குது
குளித்தவிரல் கையினை
கடதாசி தொட்டுத் துடைக்குது!

நாலிரண்டு கால்
நடந்து போகுது
நாவரண்டு அவள்
அழுகையும் கேட்கிறது!

பிள்ளைக்கு பிரிந்தது
சொத்துதெல்லாம்
அன்னையைப் பிரிந்தது
அவள் சொத்தன்றோ?


                         -உமர் அலி முகம்மதிஸ்மாயில்

அந்த(க ) அழகி!

By : Unknown









அந்தகாரத்தின்
சொந்தக்காரி நான்
நந்தவனத்தில் என்னால்
நடக்க மட்டுமே முடியும்!

ஒளி என்ற சொல்லின்
ஒலியைத்தான் கேட்டதுண்டு
விழி வழியாய் ஒருநாளும்
பார்த்ததில்லை!

நிறங்களின் நாமம்தான்
நானறிவேன்
நிறங்களை நான் கண்டதில்லை!

கருப்பின் எதிர்வண்ணம்
எனக்கோ புதிர் வர்ணம்!

என் கண்களைத்தவிர
ஏனைய உறுப்புக்கள்
எப்போதும்
பார்த்துக்கொண்டே இருக்கின்றன!

தொழிலிழந்த கண்களுக்கு
கருப்புக்கண்ணாடிச் சட்டை
பார்ப்பவர் புரிந்து கொள்ள
அது விளம்பர அட்டை!

வெள்ளைப் பிரம்பொன்று
வீதியைக்கடப்பதற்கு
எந்தப்பிரம்புமில்லை
விதியைக்கடப்பதற்கு!

இருளே எனது ராஜ்ஜியம்
விழியற்ற என்
வாழ்வோ ஒரு பூஜ்யம்!

சிருஸ்டித்த கர்த்தா
சிரசுவைக்க மறந்துவிட்டார்
சிரழிந்து கிடக்கிறேன்
சிறகொடிந்த பறவை நான்!

அகவிழி திறந்துதான்
அகிலத்தைப்பார்க்கிறேன்
அகப்புலக் காட்சியால்
அதன்வழி காண்கிறேன்!

முட்களை நான்
வேண்டுமென்று
மிதிப்பதில்லை
முன்னே வரும் உங்களை
நான் தெரிந்து கொண்டும்
முட்டவில்லை!

ஒளிவாங்கு
விழி செய் பாவங்கள்
செய்யாமல் தப்பிவிட்டேன்
ஏறி நரகம் போகாது
எனை நானும் காத்து விட்டேன்!

ஈக்கள் கூட
என்னை ஏளனிப்பது
எனக்குப் புரிகிறது!

நீங்கள் கூட
என்னை இரக்கமாய்
பார்ப்பதும் தெரிகிறது!

தினமும் வழிதேடித்
தடுமாறும் என்னை
தானாகத் தொட்டு
வழிகாட்ட வந்தாய்

அதுபோல் கலியாணம்
செய்தெனக்கு
தாலிகட்ட வருவாயா?
எந்தன்
இருவிழியாய் இருப்பாயா?

உன்கண்ணால் உலகத்தை
பாத்திடுவேன்
என் எண்ணம் உனக்காக
காத்திடுவேன்!


                    -உமர் அலி முகம்மதிஸ்மாயில்

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -